இந்திய அணிக்கு இமாலய இலக்கு! ஆஸி வீரர்கள் அசத்தல் அரைசதம்!  - Seithipunal
Seithipunal


இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் இன்று சிட்னியில் தொடங்கியது. முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி இந்திய அணிக்கு 289 ரன்கள் என்ற இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ளது. 

ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், கேரே ஆட்டத்தைத் தொடங்கினார். புவனேஷ்குமார் வீசிய முதல் இரு ஓவர்களில் ஆஸி. பேட்ஸ்மேன்கள் சற்று ஆட்டம் கண்டார்கள். அந்த பதட்டத்திலே ஆரோன் பிஞ்ச் 6 ரன்கள் சேர்த்த நிலையில், புவனேஷ்குமார் ஓவரில் கிளீன் போல்டாகி அவுட்டானார். 

அடுத்து மூன்றாவது வீரராக கவாஜா களமிறங்கி, கேரேயுடன் கைகோர்த்தார். கேரேயும், கவாஜாவும் நிதானமான தொடக்கத்தினை அந்த அணிக்கு கொடுத்தார்கள். வேகபந்துவீச்சு அதற்கு மேல் எடுபடாத நிலையில் 10-வது ஓவரை சுழற்பந்த்வீச்சாளர் குல்தீப் வீசினார். அதற்கு உடனடியாக பலனும் கிடைத்தது. குல்திப்பீன் முதல் ஓவரிலேயே கேரே 24 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த மார்ஷ் கவாஜாவுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடினார்கள். டெஸ்ட் போட்டியில் எதிர்பார்க்கபட்ட கவாஜா ஒருநாள் போட்டிக்கு திரும்பிய நிலையில் சிறப்பாக விளையாடினார். கிடைத்த நல்ல பந்துகளை பவுண்டரிகள் விளாசிய கவாஜா 70 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரவிந்திட ஜடேஜா வீசிய 29-வது ஓவரில் கவாஜா எல்பிடபிள்யு ஆகி ஆட்டமிழந்தார். கவாஜா  81 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். 

அடுத்து வந்த ஹேண்ட்ஸ்கம்ப், மார்ஷுடன் சேர்ந்தார். ஹேண்ட்ஸ்கம்ப் களமிறங்கியது முதலே அதிரடியாக  பவுண்டரிகளும் அடித்து ரன்களைச் சேர்த்தார். மறுபுறம் நிதானமாக பேட் செய்த ஷான் மார்ஷ் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின் குல்தீப் யாதவ் வீசிய 39-வது ஓவரில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஆல்ரவுண்டர் ஸ்டோனிஸ், ஹேண்ட்ஸ்கம்புடன் இணைந்தார். இருவரும் கடைசி 7 ஓவர்களில் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். இருவரையும் கட்டுபடுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். 
புவனேஷ் குமார் வீசிய 48-வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்ப் 73 ரன்களில் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதி வரை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தனர். ஸ்டோனிஸ் 47 ரன்களிலும், மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியத் தரப்பில் புவனேஷ்குமார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

43 ஓவர்கள் வரை இந்திய அணியின் பந்துவீச்சு அசத்தலாக இருந்த நிலையில் கடைசி 7 ஓவர்களில் 80 ரன்கள் விட்டுகொடுத்து அதிர்ச்சி அளித்தனர். இந்தியப் பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், கலீல் முகமது, குல்தீப் பந்த்வீச்சில்  ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் அனல் பறந்தது. 289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்து உள்ளது. 

English Summary

Australia set big target to India in Sydney ODISeithipunal