"பந்து வீச்சாளர்கள் எல்லாம், பந்து வீச விராட் கோலியிடம்தான் கற்று கொள்ளவேண்டும்" - அஸ்வின் பேட்டி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில், கடந்த 21 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கியது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால்  டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை முடிந்தது.

இந்நிலையில், டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி  அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்கிடையே இரு அணிகளுக்கான ஒரு பயிற்சி ஆட்டம் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, விஹாரி, ப்ரித்வி ஷா ஆகியோர் அரை சதம் அடித்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா அணி 356 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து ஆடிவருகிறது. இந்த பயிற்சி ஆட்டம் இன்றுடன் முடிவடைகிறது.

இப்போட்டியில், இந்தியா பவுலர்கள் களைத்து இருந்த நேரத்தில், கேப்டன் விராட் கோலி பவுலிங் செய்தார். அவர் வீசிய இரண்டு ஓவர்களில் 6 ரன்கள் கொடுத்தார்.

பின்னர் இது குறித்து பேட்டியளித்த அஸ்வின், "பந்து வீச்சாளர்கள் எல்லாம் எப்படி பந்து வீச வேண்டும் விராட் கோலியிடம் கற்று கொள்ளவேண்டும்" என்று கிண்டல் செய்யும் வகையில் பேசினார். உடனே "நான் இதை விளையாட்டாக சொன்னேன்" என்றார். பந்து வீச்சாளர்கள் களைத்து இருந்ததால் அவர் இரண்டு ஓவர்கள் பந்து வீசினார் என்று அஸ்வின் குறிப்பிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

"All the bowlers have to learn the ball with Virat Kohli" - Aswin interviewed!


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->