எம்.ஜி.ஆர் அவர்களை அ.தி.மு.கவில் இருந்து நீக்கிவிட்டார்களா?. அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி!. - Seithipunal
Seithipunal



புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக 2 ஆயிரம் காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று அதிகாலை தொடங்கியது. இந்த வீர விளையாட்டில் 500 காளையர்களும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். 

அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பல அ.தி.மு.க அமைச்சர்களும் விழாவில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக நடந்துகொண்டு வருகிறது. போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கும், காளையர்களுக்கும் பல கோடி ரூபாய்  மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.    

          

அங்கு நடக்கும் வீர விளையாட்டில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 காளைகள் மைதானத்திற்கு வந்துள்ளன. 

வாடிவாசல் முகப்பில் வைத்திருக்கும் பேனர்களில் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பண்ணீர்செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் உள்ளிட்ட புகைப்படம் மட்டும் வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக அதிமுக கட்சியின் சார்பாக வைக்கப்படும் பேனர்களில் எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கும். 

ஆனால் புதுக்கோட்டை விராலிமலையில் நடக்கும், கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் விழாவின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் எம்.ஜி.ஆர் அவர்களின் புகைப்படம் இல்லாததால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். மேலும் எம்.ஜி.ஆர் அவர்களை கட்சியில் இருந்தே தூக்கிட்டீங்களா? எனவும் விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk supporters feel for jalllikattu flex


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->