82 வருட சாதனையை 32 வயதில் முறியடித்த பந்து வீச்சாளர்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. தற்போது இரு அணிகளுக்கிடையான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 274 ரன்களும் பாகிஸ்தான் அணி 348 ரன்களும் எடுத்தது. தற்போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வருகிறது.

இந்த போட்டியின்போது, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா, லதாம் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த விக்கெட் எடுத்ததன் மூலம் அவர் 199 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்தால் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில், இன்று அவர் சோமர்வில்லேவின் விக்கெட்டை வீழ்த்தி 200 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இவர் 33 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவரை இந்த சாதனையை 82 வருடத்திற்கு முன், 1938ல் ஆஸ்திரேலிய வீரர் க்ரிம்மேட் 36வது டெஸ்ட் போட்டியில் நிகழ்த்தினார். இந்த சாதனையை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா முறியடித்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் அஷ்வின் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

82-year-old record breaking a 32-year-old bowler


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->