6-வது புரோ கபடி லீக் போட்டி.! தபாங் டெல்லி கட்டுப்படுத்திய குஜராத் பார்ச்சுன் ஜயண்ட்ஸ்.! - Seithipunal
Seithipunal


12 அணிகள் பங்கேற்று விளையாடும் 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் உபி மாநிலத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியும், குஜராத் பார்ச்சுன் ஜயண்ட்ஸ் அணியும் மல்லுக்கட்டி நின்றது.

ஆட்டம் தொடங்கியது முதலே குஜராத் அணி வீரர்கள் ஒருங்கிணைந்த ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் அந்த அணி 27 - 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் குஜராத் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
 
இறுதியில், தபாங் டெல்லி அணியை 45 -38 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் பார்ச்சுன் ஜயண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இது குஜராத் அணி பெற்ற ஐந்தாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

6th Pro Kabadi League match Gujarat Fortune Giants team win

செய்திகள்Seithipunal