தமிழகத்தில் நாம் பாத்திடாத, வற்றாத நீருற்று கொண்ட அபூர்வ கோவில்! - Seithipunal
Seithipunal


அனைவரும் தெரியாத மிகவும் சிறப்பு வாய்ந்த அரிய ஆன்மிக தகவல்கள் நிறைய உள்ளது. அவை அனைத்தும் கடவுளின் சக்தியில் நடைபெறுபவை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆச்சரியமான விஷயங்கள் இருக்கும். அவை நம்மில் பலருக்கும் தெரிந்தவையும் இருக்கும், சில தெரியாத விஷயங்களும் இருக்கும்.

ஆனால் அவை அனைத்துமே நம்மை வியக்கவும், பிரமிக்க வைக்கவும் செய்யக்கூடியவை. அவ்வாறு இயற்கை எழில் கொண்ட அழகான பசுமையான இடத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் கோவிலில் ஒரு ஆச்சரியமான தகவல் உள்ளது.

அந்த கோவில் தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் இருக்கும் அருள்மிகு மாவூற்று வேலப்பர் கோவில். இந்த இறைவன் வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு பழமையானதாகும்.

வற்றாத நீருற்று :

இந்த ஆலயம் மலைகள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. தற்போது வேலப்பர் குடிகொண்டிருக்கும் பகுதி முழுமையும், ஆதியில் மருதம் மற்றும் மாமரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது.

இக்கோவிலின் தலவிட்சமாக மாமரம் இருக்கிறது. கோவிலுக்கு தெற்கே உள்ள இந்த மாமரத்தின் அடியில் வற்றாத நீரூற்று, எப்பொழுதும் பொங்கி வழிந்தபடி இருக்கிறது. இத்தல விநாயகர் மாவூற்று விநாயகர் என்ற திருநாமத்தடன் அருள்பாலிக்கிறார்.

மாமரத்தின் அடியில் இருந்து வரும் ஊற்று காரணமாகவே, இந்த இறைவன் 'மாவூற்று வேலப்பர்" என்றும், இந்த தீர்த்தம் 'மாவூற்று தீர்த்தம்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், தீராத நோய்களும், மனக்குறைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varratha neerrru temple


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->