40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்க்க கூடிய வரதராஜப் பெருமாள்! - Seithipunal
Seithipunal


பல பெயர்களில், பல ரூபங்களில், பல கோவில்களில் அர்ச்சாவதாரமாக, அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படி, கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளை, காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில் முதலாவதாக தரிசிக்கலாம். வேண்டும் வரமெல்லாம் தரும் இந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் அப்படி என்ன ரகசியங்கள் உள்ளது என்று பார்ப்போம்.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை :

இக்கோவிலில் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்தி வரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் 2019ம் ஆண்டில்தான். அப்போது 10 நாட்களுக்கு அவரைக் தரிசிக்கலாம். பிறகு மறுபடி நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார்.

அத்தி சிற்ப அதிசயம் :

கற்சிற்ப காலத்துக்கு முன்னால் அத்தி மரத்தாலேயே இறை திருவுருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கும் அத்திமரம், எத்தனை வருடம் நீரில் ஊறினாலும் கெட்டுப் போகாது என்பதற்கும் சாட்சியாக இந்த அத்திவரதர் விளங்குகிறார்.

ஆங்கிலேயரின் பரிசு :

வரதராஜப் பெருமாள் கழுத்தில் அணிந்திருக்கும் மீன் (மகரம்) வடிவிலான அணிகலன் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சென்னையில் உயரதிகாரியாகப் பணியாற்றிய ராபர்ட் கிளைவ், தன் பக்திக் காணிக்கையாக செலுத்திய ஆபரணம்.

தேவலோக விருந்து நறுமணம் :

ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு, பிரம்மன் வரதர் சந்நதிக்கு வந்து வரதரை பு+ஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில், பெருமாளுக்கு நைவேத்யமாகத் தயாரிக்கப்பட்ட பலகாரங்களை பெருமாள் சந்நதிக்குள் வைத்துவிட்டு, வெளியே வந்து விடுகிறார்கள்.

குறிப்பிட்ட நேரம் கழித்து, அதாவது பு+ஜை முடித்து பிரம்மன் சென்றபின், உள்ளே நுழையும் போது அந்த நைவேத்ய பாத்திரங்களைத் திறந்து பார்த்தால் அது, தேவலோக விருந்தின் நறுமணத்தைக் கொண்டிருப்பதை நுகர்ந்து பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.

மூலவரின் முகத்தில் சு+ரிய கதிர்கள் :

சித்திரை மாத பௌர்ணமியை அடுத்த 15 நாட்களில் அஸ்தமன நேரத்தில், தன் கிரணங்களை மூலவரின் முகத்தில் விழுமாறு செய்து வணங்குகிறான் ஆதவன். இந்த அற்புதம் வேறெந்த திவ்ய தேச தலத்திலும் காணக் கிடைக்காதது.

தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி :

இங்கே தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி என்று இரண்டு பல்லி உருவங்களை மேலே விதானத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள். ஏணிபோன்ற படியேறிச் சென்று அந்தப் பல்லிகளைத் தொட்டு வணங்கி, வரதராஜரையும் தியானித்துக் கொண்டால், தீராத நோய்களும் தீர்கின்றன.

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் புத்திரர்களான ஹேமன், சுக்லன் இருவரும் கௌதம முனிவரால் சாபம் பெற்று இவ்வாறு பல்லிகளாக ஆனார்கள் என்றும் வரதரை வழிபட இந்திரன் வந்தபோது அவன் பார்வை பட்டு அவர்கள் சாப விமோசனம் பெற்றார்கள் என்றும் புராணம் சொல்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varatharaja perumal temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->