வடலூரில் இன்று சிறப்பாக நடைபெற்ற தைப்பூச திருவிழா மற்றும் அன்னதானம்!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது, வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெறும் தைப்பூச விழாவில் ஆறு கால ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.

இன்று நடைபெற்று வருகிற வடலூர் தைப்பூச திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் பெற்று வருகின்றனர். 

ஏழு திரைகளை விலக்கி காட்டப்படும் இந்த ஜோதி தரிசனம், அருட் பெருஞ்சோதியாகிய இறைவனை உணரும் தத்துவத்தை போதிக்கிறது.

1. கறுப்புத்திரை- அசுத்த மாயா சக்தி
2. நீலத்திரை- சுத்த மாயா சக்தி
3. பச்சைத்திரை- கிரியா சக்தி
4. சிவப்புத்திரை- பரா சக்தி
5. மஞ்சள் திரை- இச்சா சக்தி
6. வெள்ளைத்திரை- ஞான சக்தி
7. கலப்புத்திரை- ஆதி சக்தி

இந்த ஏழு மாயத்திரைகள் நமது புருவ மத்தியிலுள்ள ஆன்ம பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது, ஏழு மாயத்திரைகளை அகற்றினால் நாம் அருட் பெருஞ்சோதியான இறைவனை உணரமுடியும் என்கிற தத்துவத்தை குறிக்கும் பொருட்டே வடலூர் சத்திய ஞான சபையில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

இதனை தொடர்ந்து இங்கு மிகப்பெரிய அளவில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vadalur thaipoosa thiruvizha


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->