உலக புகழ்பெற்ற திருவாரூர் தேர்திருவிழா.,கோலாகலமாக நிறைவடைந்தது.!! பக்தர்கள் மகிழ்ச்சி!!  - Seithipunal
Seithipunal


திருவாரூர் உள்ள தியாகராஜ சுவாமி  திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும், இக்கோவிலின் ஆழித்தேர் தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி இந்த தியாகராஜ சுவாமி  திருக்கோவிலின் பங்குனி உத்திரப் பெருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், நேற்று பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இந்த ஆழித்தேரோட்டத்திற்கு திருவாரூர் மட்டுமல்லாது தமிழகத்தை சேர்ந்த பல ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும், சில வெளிநாட்டு பக்தர்களையும் காணமுடிந்தது. 

இதைத்தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், 'ஆரூரா, தியாகேசா’ என பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஆழித் தேரைத் தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் தேர்களையும் பக்தர்கள் இழுத்து வந்தனர். கொண்டாட்டமும் கோலகலமுமாக இனிதே தேர்த்திருவிழா நடைபெற்று முடிந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur azhither celebrate by tn peoples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->