பேசும் கடவுள்.. ஆச்சரியம் ஆனால் உண்மை.!! - Seithipunal
Seithipunal


உலகிலுள்ள கோவில்களில் இன்றும் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் சில மர்மங்கள் எளிதில் நம்ப முடியாததாகவும், நம்மை அப்படியே வியப்பில் ஆழ்த்துவதாகவும் அமையும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள சபலி என்னும் ஊரில் அமைந்துள்ளது மா காளி மந்திர் கோவில். இந்த கோவிலில் உள்ள பாறை ஒன்றில் எங்கு தட்டினாலும் மணி ஓசை கேட்கும் அதிசயம் நிகழ்கிறது.

அந்த கோவிலில் பல பாறைகள் இருந்தாலும் ஒரே ஒரு பாறையில் மட்டும் இந்த அதிசயம் நிகழ்கிறது.

அங்கு செல்பவர்கள் யார் வேண்டுமானாலும் இதை சோதித்து பார்க்கும் வகையில் அந்த பாறை வெளியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிசய நிகழ்வைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள், அந்த குறிப்பிட்ட பாறையில் அதிக அளவிலான இரும்பு இருப்பதால் அதன் சத்தம் விசித்திரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பல பாறைகள் இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு பாறையில் மட்டும் எப்படி இவ்வளவு அதிகமான இரும்பு இருக்கிறது என்பது இன்றும் விடைக்கிடைக்காத புதிராகவே உள்ளது.

இரவில் பேசும் கடவுள் சிலைகள் :

பீகார் மாநிலத்தின் பக்ஸார் பகுதியில் அமைந்துள்ளது ராஜ ராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி கோவில். இக்கோவில் 400 வருட பழமையான கோவிலாகும்.

இந்த கோவிலில் இரவு நேரங்களில் மட்டும் மர்ம குரல்கள் ஒலிப்பதாக அங்குள்ள பக்தர்கள் கூறுகின்றனர்.


கோவிலில் உள்ள கடவுள் சிலைகள் பேசிக்கொள்வதால் தான் மர்ம குரல்கள் கேட்கிறது என்று சிலரும், இந்த மர்ம ஒலிகள் கருவறைக்கு வெளியில் இருந்து தான் வருகிறது என்று சிலரும் கூறுகின்றனர்.

இக்கோவிலில் நிகழும் இந்த மர்ம நிகழ்வு ஞானிகளுக்கும், கோவில் பெரியவர்களுக்கும் இன்றும் புரியாத புதிராகவே உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perum kadavul


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->