6 மணிக்கும் மேல் கோவிலுக்குள் கல்லாகும் மனிதர்கள்..! - Seithipunal
Seithipunal


பெரும்பாலும் கோவில்கள் ஆன்மீகத்திற்கும், கட்டிடக்கலையை பறைசாற்றும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒருசில கோவில்கள் வித்தியாசமான அம்சங்களை கொண்டதாகவும் இருக்கும்.

விசேஷ காலங்களில் பக்தர்கள் கோவில்களுக்கு குடும்பத்தோடு சென்று இறைவனை தரிசித்து விட்டு வருவார்கள்.

கோவிலுக்கு சென்றாலே மனதிற்கு நிம்மதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்பதால் கோவில்களுக்கு பக்தர்கள் விரும்பி செல்வார்கள்.

அந்த கோவிலே பக்தர்களுக்கு பயத்தை ஊட்டினால்.... எப்படி இருக்கும்?

அதற்கு என்ன காரணம்? என்று யோசிக்கிறீர்களா? பார்க்கலாம் வாங்க...

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது ஆயிரம் வருடங்கள் பழமையான கிரடு என்னும் மர்மங்கள் நிறைந்த கோவில்.

பழமைக்கும் கட்டிடத்திற்கும் பெயர்பெற்ற இக்கோவில் தற்போது பயத்திற்கும் அமானுஷ்யத்திற்கும் புகழ்பெற்று விளங்குகிறது.

ஆனால், இந்த கோவிலிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மாலை 6 மணி ஆனாலே பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

காடுகள் நிறைந்த பாலைவனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலிற்கு மாலை நேரங்களில் வரும் பக்தர்கள் தப்பி தவறி கூட 6 மணிக்குமேல் இங்கு தங்குவதில்லை. ஏன் தெரியுமா?

இரவு நேரங்களில் இக்கோவிலில் தங்குபவர்கள் தூங்கிவிட்டால் அவர்கள் கல்லாக மாறிவிடுவார்கள் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

எனவே அப்பகுதி மக்கள் புதியதாக கோவிலுக்கு வருபவர்களிடம் இரவு நேரங்களில் கோவிலில் தங்கக்கூடாது என்று எச்சரிக்கின்றனர்.

சிலர், பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊருக்கு வந்த முனிவர் ஒருவருக்கு இங்கு வாழும் மக்களை பிடிக்காததால் அனைவரையும் கல்லாக மாற்றிவிட்டதாக கூறுகின்றனர்.

இன்றும் அந்த முனிவர் அந்த கோவிலில்தான் இருக்கிறார் என்கின்றனர் வேறு சிலர்.

இந்த கோவிலில் உள்ள சுவர்கள், தூண்கள் என எல்லாவற்றிலும் மனித உருவங்களைக் கொண்ட சிலைகள் உள்ளன.

சிலைகள் பார்ப்பதற்கு மனிதனாக இருந்து கல்லாக உருமாறியதாகவே தோற்றமளிக்கிறது என்பது ஆய்வாளர்களின் கருத்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallaka marum manitharkal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->