இன்றைய (16.02.19) ராசிபலன் : இன்று 12 ராசியில் யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது? - Seithipunal
Seithipunal


மேஷம்:

தொழில் சார்ந்த முயற்சிகளில் காரிய சித்தி அடைவீர்கள். புதிய மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்:

கணவன், மனைவிக்கிடையே  உறவுநிலை மேம்படும்.  பொருட்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ள உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான பிரபலங்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும். 

கடகம்:

பூர்வீகச் சொத்துகளால் தனவிரயம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். திடீர் யோகத்தால் தனவரவு அதிகரிக்கும். பேசும்போது கவனத்துடன் இருக்கவும்.  எதிர்பார்த்த உதவிகளால் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும்.

சிம்மம்:

குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். நீண்ட நாள் ஆசைகள்  நிறைவேறும்.

கன்னி:

மூத்த சகோதரர்களினால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அரசு வகை உதவிகள் சிறப்பாக இருக்கும். தொழிலின் மூலம் பிரபலமடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர் உண்டாகும்.

துலாம்:

கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தந்தை மற்றும் மகனுக்குமான உறவு மேம்படும். தலைமை பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய செயல்களால் கீர்த்தி உண்டாகும்.

விருச்சகம்:

உங்களின் வேலைகளை நீங்களே முடிப்பது சிறப்பு. பொது நலத்திற்காக நன்கொடைகளை அளித்து மகிழ்வீர்கள். உயரமான இடங்களில் கவனத்துடன் பணியை மேற்கொள்ளவும். வெளியூர் தொழில் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் கவனத்துடன் இருக்கவும். 

தனுசு:

தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். விட்டுக்கொடுத்து செல்லவும். 

மகரம்:

நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செயல்கள் நடைபெறும். மன குழப்பத்தால் வேலையில் மந்தத்தன்மை உண்டாகும்.  வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதம் ஏற்படும்.

கும்பம்:

பெரிய நிறுவனங்களில் இருந்து கெளரவ பதவிகள் வந்தடையும். தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். 

மீனம்:

எதிர்வாதத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.  கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விமர்சன பேச்சுகளை குறைப்பது நன்மையை தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

february 16 rasi palan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->