25 நாள் முதல்வர், மீதி 5 நாட்கள் என்ன செய்யபோகிறார்..? திருத்தி அமைக்கப்பட்டதா சட்டம்..? ஏன் மீடியாக்கள் விவாதிக்கவில்லை..? - Seithipunal
Seithipunal


இந்த செய்தி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஒரே ஒருமுறை மட்டுமே ஒளிபரப்பாகியது... இந்தச் செய்தியை ஒளிபரப்புவதை நிறுத்தி விடுமாறு தொலைக்காட்சி நிறுவனங்களை பாஜக நிர்ப்பந்தப்படுத்தி இருக்க வேண்டும்.

அல்லது, முதலமைச்சரே கலங்கிப் போய் தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். எப்படியோ… செய்தித்தாள்களின் பக்கங்களில் இந்தச் செய்தி இடம் பெற முடியாமல் போய் விட்டது. என்ற செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

கோரக்பூரில் இருந்து 1998 முதல் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வான அவர், கடந்த பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு , கோரக்பூர் மடத்தின் தலைமைப் பூசாரியாக 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

தனது லக்னோ அலுவலகத்திலிருந்து வெளியே ஐந்து நாட்களுக்குத் தங்கியிருந்து, தலைமைப் பூசாரியாக தனது மடத்தில் மதச் சடங்குகளைச் செய்வதற்காக அனைத்துப் பாதுகாப்புடன் உத்தரப் பிரதேச முதல்வர் செல்வது என்பது,

மத நோக்கங்களுக்காக பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.

இதன் மூலமாக ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இழப்பிற்கு எதிராக பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திட வேண்டும்.

அவ்வாறில்லை என்றாலும் கூட ஆதித்யநாத் என்பவர் தலைமைப் பூசாரியா அல்லது மாநிலத்தின் முதலமைச்சரா என்ற கேள்விக்கான விடையைக் கண்டறிய வேண்டும்.

மூலம்; முனைவர் தா. சந்திரகுரு


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yogi adithyanath going to work for a temple for five days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->