முகத்தழகு எல்லாம் என்ன அழகு..? இந்த வீடியோவில் வரும் பெண்ணுக்கு எது அழகுனு பாருங்க..! - Seithipunal
Seithipunal


அழகு மற்றவர்களை திரும்ப பார்க்க வைக்குமே தவிர திரும்ப திரும்ப பார்க்க வைக்காது. ஒருவரின் உள்ளத்தை வைத்தே உண்மையான அழகு தீர்மானிக்கப்படுகிறது. பல காதல் முகத்தை பார்த்து வருவது முகமாற்றம் காணும் போது பிரிந்து விடுகிறது. அதுவே உள்ளத்தை பார்த்து வரும் காதல், உருவமே சிதைந்தாலும் இணைய துடிக்கும்.

இதற்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட சில பெண்களை அவர்களது காதலர்கள் மனமுவந்து திருமணம் செய்து  கொண்டதை உதாரணமாக கூறலாம். அவர்கள் விரும்பியது மனதை தானே தவிர அவர்களது உடலையோ, உருவத்தையோ அல்ல. அதனால் தான் முகம் சிதைந்து போனாலும், காதலியை கைவிடாது கரம் பிடிக்கின்றனர்.

இப்படி பல சம்பவங்களை முகஅழகை தாண்டிய விடயங்களுடன் தொடர்புபடுத்தி கூறலாம். அந்த வகையில் கேரள மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. வெயிலுக்கு குடை பிடித்து செல்லும் சில பெண்கள், துளி குடை நகர்ந்ததால் கூட வெயில் பட்டு தோல் கருத்து விடும் என்று நினைக்கும் வேளையில், கொட்டும் மழையிலும் தன்னிலை கருதாது இந்த பெண் என்ன செய்கிறார் என்பதை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஒரு நிகழ்வின் மூலமாக தான் எப்படிப்பட்ட முகஅமைப்பை கொண்டிருந்தாலும், இந்த பெண் தேவதையாக தெரிகிறார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

women look like angel when do this


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->