எங்கே அந்த கத்துக்குட்டி உதயநிதி! திமுகவிற்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் பாமக அதிமுக கூட்டணியில் திட்டங்களை வைத்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில், திமுக சார்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் அக் கட்சியின் முதன்மை பிரச்சார நபர் என்று கூறிக்கொள்ளும் உதயநிதி ஸ்டாலின் அதிமுக தலைவர்கள்  பாமக தலைவர்களையும் பாஜக தலைவர்களையும் கடுமையாக ஒருமையில் தகாத வார்த்தைகளில் விமர்சனம் செய்து வந்தார். 

அவரை விட பல படிகள் மேலே சென்ற அவருடைய தந்தை மு க ஸ்டாலின் தான் ஒரு கட்சியின் தலைவர், தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் துணை முதல்வர் என்பதனை எல்லாம் மறந்து ஏதோ ஒரு சாதாரண மனிதன் தெருவில் பேசுவது போல கடுமையான சொற்களால், திரைப்படங்கள் பார்ப்பது போல வசவு சொற்களை அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மு க ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். 

மேலும் நாங்கள் முறைகேடு செய்தது குறித்து பேசிய மு க ஸ்டாலின் எங்களுடன் விவாதிக்க தயாரா என்று அன்புமணி ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு தொடர்பே இல்லாமல் உதயநிதி ஸ்டாலின்  8 வழி சாலை தொடர்பாக நான் விவாதிக்க தயாராக இருக்கின்றேன் இடத்தையும் நேரத்தையும் அன்புமணியே வெளியிடலாம் என்று அறிவித்தார். இதனை பெரிதாக திமுக நபர்கள் விளம்பரம் செய்தார்கள்.

ஆனால் அடிப்படை அரசியல் கூட அறியாதவர்கள் தான் இதன் விமர்சனம் செய்திருக்க முடியும் என  அரசியல் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். எட்டு வழி சாலை திட்டம் என்பது பாமக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, பல கட்ட போராட்டங்களை நடத்திய பிறகு வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது.  இந்த நேரத்தில் அது குறித்து பொதுவெளியில் விவாதம் என்பதெல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதாக ஆகும். இந்த அடிப்படை கூட இல்லாமல் உதயநிதி அன்புமணியை 8 வழி சாலை விவாதம் செய்ய அழைத்தது அரசியல் நகைச்சுவையாகவே பார்க்கப்பட்டது. 

உதயநிதியின் நடவடிக்கைகள் ஒரு சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கை, அவரை விட்டு பிரச்சாரம் செய்யப்படும் நிலையில் தான் திமுக இருக்கிறதா என்ற அவப்பெயரையும் திமுக எடுத்துக்கொண்டது.  இந்நிலையில் இன்று 8 வழி சாலை தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தீர்ப்பு குறித்து பேசிய அன்புமணி பெரிதும் வரவேற்கிறேன். இது மக்களுக்கான தீர்ப்பு விவசாயிகளுக்கான தீர்ப்பு என்று அறிவித்து பெருமையாக அவர் சென்றுவிட்டார்.

ஆனால் இந்த தீர்ப்பு வந்த பிறகு, எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்த அன்புமணியுடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் தற்போது எங்கே இருக்கிறார் என்றுதான் இணையத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் தேடி வருகிறார்கள். ஏனெனில் இந்த எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அறிக்கையோ, கைவிட போராட்டங்களையும் வழக்கையும் கொடுக்கவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை ஆகும். எதிர்க்கட்சி செய்ய வேண்டிய வேலையை பாமக செய்துள்ள நிலையில் அதனை குற்றம் சொல்லவும் விமர்சனம் செய்யவும் மட்டுமே திமுக முந்திக் கொண்டு வந்தது தற்போது தீர்ப்பு பாமகவிற்கு சாதகமாக வந்ததும் திமுக மௌனம் மோடுக்கு சென்று உள்ளது. 

இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

where is udhaynidhi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->