உங்களுக்கு கிடைத்துவிட்டதா? வாட்ஸ்அப் நிறுவனம் அளித்துள்ள புதிய தகவல்கள்! விழிப்போடு இருங்கள்! - Seithipunal
Seithipunal


வாட்ஸ்அப்பில் வரும் வதந்திகளைத் தடுக்க அதனை பயன்படுத்தபவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து  அந்த நிறுவனமே சில அறிவுரைகளை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கியுள்ளது.

தவறான செய்திகள், தகவல்கள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் புதிதாக எழுதப்பட்டதா? அல்லது மற்றவர்கள் எழுதி  ஃபார்வேர்ட் செய்யப்பட்டதா? என்பதை அறியும் வசதி தற்போது வாட்ஸ்அப் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வந்த தகவலை பதிவு செய்தது யார் என தெரியாத போது அதன் உண்மைத் தன்மையை இருமுறை பரிசோதிக்க வேண்டும்.

புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்கும்போது அது தொடர்பான செய்திகள் உண்மைதான என்பதை இணையதளத்தில் தேடி உறுதி செய்து கொள்ள வேண்டும்.  ஒரு தகவலை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் செய்தி இணையதளங்களில் தேடி பார்க்க வேண்டும்.  ஒன்றுக்கும் மேற்பட்ட செய்தி இணையதளங்களில் அதே  தகவல் இருந்தால் அது உண்மையானதாக இருக்க வாய்ப்புள்ளது.

ஒரு தகவலை நம்பவே முடியாததாக இருப்பின் அந்த செய்திகள் பெரும்பாலும் தவறான தகவலாகவே இருக்க வாய்ப்புள்ளது. அதன் உண்மைத் தன்மையை  சோதித்து அறிய வேண்டும். வன்முறையை உண்டாக்கும்  மற்றும் கோபப்படுத்தும் நோக்கோடு ஒரு தகவல் இருப்பதாக உணர்ந்தால் அதை மற்றவருக்கு பகிரும் முன் இருமுறை சிந்திக்க வேண்டும். 

பிரபலமான  இணையதளத்தின் பக்கம் போல சில இணைப்புகள் அனுப்பப்பட்டாலும் அதில் சில எழுத்துகளோ, வார்த்தைகளோ மாறி இருந்தால் அது நிச்சயமாக தவறானதாக இருக்கும்.  உங்களுக்கு ஒரு தகவல் பலமுறை பகிரப்பட்டுள்ளது என்பதற்காக அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் தவறான தகவல்களே அதிகமாகவும், வேகமாகவும் பரவி வருகின்றன. 

இந்தியாவில் குழந்தை கடத்தல் உள்ளிட்ட வதந்திகளால் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் வதந்திகளை தடுக்குமாறு  மத்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனத்தை கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து  வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள்  விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காக வாட்ஸ்அப் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whatsapp company send some awerness information to their customers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->