சிந்திக்க தெரியாத முட்டாள்!! வாட்ஸாப் வைரல் கதை!! "கடலில் உப்பு தானாக வந்ததா?!" - Seithipunal
Seithipunal


தற்பொழுது இணையதள உலகில் பல்வேறு விதமான ஜோக்குகளை நாம் பார்க்க முடியும் அவற்றில் நகைச்சுவை துளிகள் நம்மை சிரிக்க வைக்கும். சில சிந்திக்க வைக்கும். கீழே உள்ள உரையாடல் உங்களை சிரிக்க வைத்தால் நீங்கள் ஞானி., சிந்திக்க வைத்தால் நீங்கள் விஞ்ஞானி!!

சிந்திக்க தெரியாத முட்டாள்

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான். வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, 

குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால்  தூக்கம் வராது என்றார். 

அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.

நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' 

அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து  பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப் 
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.

அவன் சொன்னான், 'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது  யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். " 

என்பதாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app jokes viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->