வானத்தை நோக்கி பாயும் அருவி : சீனாவில் அதிசயம்! - Seithipunal
Seithipunal


சீனாவில் வானத்தை நோக்கி அருவி நீர் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்சீன கடற்பகுதியில் உருவாகியிருந்த தைபூன் கனூன் புயல் காரணமாக காற்று பலத்த வேகத்துடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அந்நாடு அறிவுறுத்தியிருந்தது.

இதனால், ரயில், விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் குவாங் டாங் மாகாணத்தில் புயல் கரையை கடந்தது.

இந்நிலையில் தைவான் மலைப்பகுதியில் இருந்த அருவி ஒன்று மேல்நோக்கி பாய்ந்துள்ளது.

கீழ் நோக்கி பாயாமல், புவிஈர்ப்பு விசைக்கு எதிராக அருவி பாய்ந்ததால், அப்பகுதி வழியே சென்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.


அப்போது வாகனங்களில் சென்றவர்கள் அந்த அதிசய நிகழ்வை செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு இது போன்று புவிஈர்ப்பு விசைக்கு எதிராக அருவி மேல்நோக்கி பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Water fall flows against gravitational farce in south china


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->