சிக்கலில் சிக்கி கொண்ட விஜய்..! இன்று இரவு நடக்கவிருக்கும் மாபெரும் திருப்பம்..!! - Seithipunal
Seithipunal


சற்றுமுன் விஜய் ரசிகர்களுக்கு அவரின் 65 படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் அதில் புகை பிடிப்பதுபோல் இருப்பதுதான் பெரும் அவருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கு ''சர்க்கார்'' என தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ''பர்ஸ்ட் லுக் '' புகைப்படமும் மாலை 06 மணிக்கு வெளியிடப்பட்டது.



 

பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது காட்டுத்தீ போல சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் விஜய்யை ரோல் மாடலாக தான் பார்த்துவருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள விஜயின் 62 வது படமான சர்கார் படத்தின் போஸ்டரில் விஜய் புகை பிடிப்பது போல இருப்பதற்கு சில அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிீர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வைக்கக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. ஆனால், அதற்கென்று சில வரைமுறை இருப்பதாக மாநில புகையிலை கட்டுப்பாடு மையம் தெரிவிக்கிறது.

புகையிலை தடுப்பு சட்டம் 2003 பிரிவு 5ன் படி, நோட்டீஸ்க்கு உரிய விளக்கம் அளிக்காமலும், எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தால் சம்பந்தபட்ட நடிகருக்கு 1 முதல்  5 வருடம் சிறையும், 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாக புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது "நீங்கள் சிகிரெட் இல்லாமல் இருந்தாலும் ஸ்டைலிஷ் தான். இப்படி புகைபிடிப்பதை ஊக்குவிப்பதற்கு விஜய் வெட்கப்படவேண்டும்" என கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.



 



 

முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இப்படி கூறுவதற்கு காரணம் ஒன்று இருக்கிறது. முன்னதாக அன்புமணி ராமதாஸ் கோரிக்கையை ஏற்று, நடிகர் விஜய் தனது ''குருவி'' திரைப்படத்திற்கு பின் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன் என்று உறுதியளித்திருந்தார். தற்போது அந்த உறுதிமொழியை மீறியதன் காரணமாகவே  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.



 

இந்நிலையில், நாளை விஜயின் 43 வது பிறந்த நாள் என்பதால் இன்று இரவு மேலும் ஒரு சர்கார் படத்தின் போஸ்டரை வெளியிட போவதாக சன் பிக்ச்ர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நெட்டிசன்கள் அடுத்துவரும் போஸ்டரில் ''புகைபிடிப்பது உடல் நலத்திற்கு கேடு'' என்ற வாசகத்துடன் வெளிவர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி செய்யவில்லை எனில் போராட்டம் செய்யப்போவதாகவும் தெரிவித்துவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay next poster in 12 pm


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->