வீடியோ..!! எடப்பாடி இருக்காரா..?! இல்லை இறந்துவிட்டாரா..?! கடம்பூர் ராஜூவை ஓட ஓட விரட்டியடித்த பெண்..!  - Seithipunal
Seithipunal


கடந்த 22 ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 75 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சுட்டுக் கொன்ற அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலை மூடினால்தான் பலியானவர்களின் உடல்களை வாங்குவோம் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில். சற்றுமுன், தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்பி விட்டதால், 144 தடையை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 21 தேதி முதல் 144 தடை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற நாள் முதல் தமிழக அமைச்சர்கள் யாரும் இதுவரை நேரில் சென்று பார்க்காமல் இருந்த நிலையில், இன்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி, சற்றுமுன் தூத்துக்குடி சென்ட்ட்ற தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பொது மக்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் டிஜிபி மாற்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் சென்றனர். 




அரசு மருத்துவமயில் கடம்பூர் ராஜு நுழைந்ததுமே, நோயாளியின் உறவினர் பெண் ஒருவர், இன்னும் எத்தனை உயிர் உங்களுக்கு வேண்டும் எடுத்துக்கொள்ளுங்கள் தயவு செய்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள் என ஆக்கிரோஷமாக கூச்சல் இட்டார். இதனால் அதிச்சியடையுந்த கடம்பூர் ராஜு அந்த பெண்மணியை சமாதானம் செய்து அடுத்த நோயாளியை பார்க்க சென்றார்.




அந்த நோயாளியும், சரமாரியாக கேள்வி கேட்டு ஆலையை மூடுவேன் என்று எழுதி தாருங்கள் என்று கேட்டார், தானவந்து சிக்கி கொண்டோமோ என எண்ணிய கடம்பூர் ராஜு பாதியிலேயே திரும்பி சென்றார். ஏற்கனவே கடும் கோவத்தில் இருக்கும் தூத்துக்குடி மக்களிடம் நலம் விசாரிக்க வந்தால் கொஞ்சுவார்கள் என நினைத்து வந்தார் போல நம்ம கடம்பூர் ராஜு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM LIVE OR ALIVE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->