என்னால் மறக்க முடியவில்லை.! ‘டிக் டாக்' செயலிக்கு தடை.!! மரண பங்க மீம்ஸ்கள்.!!! - Seithipunal
Seithipunal


‘டிக் டாக்’ செயலியில் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப அசைவுகள் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபாசமாக உள்ளது.

இவற்றை தணிக்கை செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லாததால் கட்டுப்பாடு இல்லாமல் இது போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றது.

டிக் டாக் செயலியில் நமது கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ‘டிக் டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு கடந்த 3-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த உத்தரவை நீக்க மறுத்துவிட்டது. 

இதையடுத்து டிக் டாக் செயலியை இனி யாரும் ப்ளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டாரில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாமல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதும் பல மீம்ஸ்கள் வெளியாக துவங்கிவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tik tok ban memes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->