‘டிக் டாக்’ செயலியில் முதல் ஆளாக இருக்கும் தமிழிசை! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தமிழிசை! - Seithipunal
Seithipunal


‘டிக் டாக்’ செயலியில் பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு ஏற்ப அசைவுகள் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள் இதில் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபாசமாக உள்ளது.

இவற்றை தணிக்கை செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லாததால் கட்டுப்பாடு இல்லாமல் இது போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ் நாட்டில் 'டிக் டாக்' செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இது குறித்து கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, ஆபாசமாகவும் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ள 'டிக் டாக்' செயலியை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என கூறினார்.

இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் மணிகண்டன், புளுவேல் கேமை போன்று டிக் டாக்கையும் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம், டிக் டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழிசை, டிக் டாக் செயலி தடை வரவேற்கக்கூடிய ஒன்று. ஏனென்றால் அதில் அதிகம் கிண்டல் செய்யப்படக்கூடிய ஆளாக நான் இருக்கிறேன் என கூறினார். மேலும் டிக் டாக் செயலியை தடை செய்தால் அதில் மகிழ்ச்சி அடையக்கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன் எனவும் கூறினார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai say tic tok video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->