பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு அவசர எச்சரிக்கை.! மக்களே உஷார்.. உஷார்..!! ஓரிரு நாளில் நடந்த 15 சம்பவங்கள்.!! பதறிய போலீசார்.!! - Seithipunal
Seithipunal


சமூக வலைத்தளங்களில் பெரும் பங்கு வகிக்கும் முகநூலை, உலகம் முழுக்க கொடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகத்தில் யார் என்று தெரியாதவர்களிடம் கூட நாம் நண்பர்களாக பழகி கொள்ளலாம். பல நல்ல கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம். 

இந்த முகநூலின் பயன்பாடு என்பது, உலகில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிபர்கள், திரை நட்சத்திரங்கள் என அனைவரையும் தற்போது அதிகம் கவர்ந்துள்ளது. இதில் அரசியல் கட்சிகள் அதிகமாக அரசியல் கருத்துக்களையும், தங்கள் கட்சியின் பெருமைகைளையும், கொள்கைகளையும் பரப்புவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் பல நல்ல கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தாலும். அதே அளவு மோசமான சில பதிவுகளும் அதிகம் வருகின்றன. மேலும், முகநூலில் பண மோசடி, தரவுகளை திருடுவது உள்ளிட்ட சைபர் கிரைம்களும் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முகநூல் மூலமாக பண பரிமாற்ற மோசடி நடைபெற்று வருவதாகவும், இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை போலீசார் மற்றும், இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஓரிரு நாளில் மட்டும் பண பரிமாற்ற மோசடி தொடர்பாக 15 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை போலீசார் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த மோசடி சம்பவங்கள் சமீப காலத்தை விட, தற்போது அதிகம் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மக்கள் அதிகம் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் இது போன்ற மோசடி சம்பவங்கள் நடப்பதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த அவசர எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SRI LANKAN POLICE WARNING TO FACEBOOK USERS


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->