சமூக வலைத்தளங்களை சீர்படுத்த கருத்து தெரிவித்த பாண்டே.! கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்.!!  - Seithipunal
Seithipunal


இன்றைய கால கட்டத்தில் மக்கள் பலவிதமான முன்னேற்றத்தை கண்டு அதனை பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில்., நமது செய்திகளை அந்த காலத்தில் ஒருவருக்கு தெரிவிக்கவேண்டும் என்றால்., முதலில் ஒரு நபரிடம் கூறி அனுப்பி அந்த செய்தியை தெரிவித்தோம். 

அந்த செய்தியை ஊர் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றால்., தண்டோரா மூலமாக தெரிவித்து வந்தனர். காலங்களும்., கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து வளரவே., அலைபேசிகள் கண்டறியப்பட்டு., தபால் நிலையங்களில் சென்று தபால்கள் மூலமாக தெரிவித்தும்., பின்னர் தபால் நிலையங்களில் இருந்த அலைபேசியின் வாயிலாக தெரிவித்து வந்தோம். 

அதற்கு அடுத்தபடியாக அலைபேசியின் மூலமாக தெரிவித்து., அந்த அலைபேசியில் ஏற்பட்ட புரட்சி வளர்ச்சியின் விளைவால் பல்வேறு விதமான அலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டு., அதற்கான பல செயலிகள் கண்டறியப்பட்டு., எங்கோ உள்ள நபர் கூறும் கருத்திற்கு நாம் நமது கருத்தை அவரது பதிவேட்டிலேயே தெரிவித்து வருகிறோம். 

இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடிய அல்லது பல்வேறு விதமான பிரச்சனைகளை தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவது முகநூல்., ட்விட்டர்., வாட்சப் போன்ற பல்வேறு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டு அதன் மூலம் கருத்துக்களை தெரிவித்து வருகின்றோம். 

நாம் தெரிவிக்கும் ஒரு கருத்தானது பலரால் வரவேற்கப்படுவதும்., பலரால் விமர்சிக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில்., நாட்டின் வளர்ச்சிக்கு கூடுமான வரையில் உபயோகம் செய்யவேண்டிய கடமை நமது கடமையாகும். இப்போதுள்ள சூழ்நிலையில் சமூக வலைத்தளங்கள் கூறப்படும் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பலர் சமூக வலைத்தளங்களை மாற்றியமைக்க கூறி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் கருத்து ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் "பார்வர்ட் செய்யப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்தியிலும், அந்த செய்தியை உருவாக்கியவரின் எண் இருக்க வேண்டும்.முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். பெரிய மனிதர்கள் அதில் பங்கேற்க வேண்டும்" என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். 


இந்த கருத்துக்கள் அனைத்தும் சரிக்கு சமமான வரவேற்பையும்., பல எதிர்ப்பையும் பெற்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

social media about explain rangaraj pandey.,


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->