"லட்சுமி" குறும்படத்திற்கு எதிராக பேசியது இருக்கட்டும்.., இந்த படத்தை பார்த்தால் என்ன சொல்லுவீர்கள்..? காதலிப்பவர்கள் மட்டும் இதை பாருங்கள்.!! - Seithipunal
Seithipunal


'லட்சுமி' குறும்படம் இளைஞர்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஒரு பெண் வைத்திருக்கும் தவறான தொடர்பை லட்சுமி குறும்படம் நியப்படுத்துகிறது என்று சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. 

அதே நேரத்தில் சென்னையில், ஒருதலைக்காதலால் இந்துஜா எனும் பெண்,  பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

பெண்களின் பாலியல் சுதந்திரம் பேசப்படும் இந்தச் சூழலிலும்.., பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

'லட்சுமி' உள்ளிட்ட குறும்படங்கள் விமர்சனத்துக்கு உள்ளாவதற்கு முன்பு.., நாம் முடிவு கட்டவேண்டியது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குத்தான்.

அந்த வகையில், ஆண்கள் அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு குறும்படம் 'SHE 2' 'SHE' (Stop Harassment Everywhere).

காதல் என்கின்ற பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை இந்த படம் தோலுரித்து காட்டுகிறது.

இந்த குறும்படத்தில், தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை பழிவாங்க நினைத்து, ஆசிட் அடிக்கப்போய், தவறுதலாகத் தன் தங்கையின் மீதே ஆசிட் அடித்துவிடுகிறார் ஒருவர். 

ஆசிட் அடிக்க நினைத்த பெண்ணே.., அவரது தங்கையைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். அவர் குற்றவுணர்வோடு மனம் திருந்துவதாக முடிகிறது படம்.

படத்தின் முடிவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை காட்டுகிறார்கள்.

காதல் என்கின்ற பெயரால்.., கோரமாக்கப்பட்டிருக்கும் முகங்களால், ஆண்களை வெட்கித் தலைகுனியச் செய்கிறது இந்தக் குறும்படம்.

 

SHE 2 குறும்படம் உங்களுக்காக...
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

she 2 short film


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->