70 வருட திமுகவின் சாதனைகளை விளக்கும் #மண்டியிட்ட_திமுக.!! கதறும் உடன் பிறப்புகள்.!! - Seithipunal
Seithipunal


இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தங்களின் பிரசார பணியை பொதுக்கூட்டங்கள் மற்றும் பிற கூட்டங்கள் வாயிலாக ஆரம்பித்துவிட்டனர். 

இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களுக்கான கூட்டணியை தொடர்ந்து தேர்ந்தெடுத்தும்., அதனை அறிவித்தும் வந்தனர். அந்த வகையில்., தமிழகத்தில் நேற்றில் இருந்து தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிகள் முதல் தங்களின் கூட்டணியை அறிவித்து வருகிறது. 

இந்நிலையில்., தமிழகத்திற்கு காங்கிரஸ் துரோகம் விட்டதாகவும்., தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் இனி ஒருபோதும் காங்கிரசுடன் கூட்டணி வைக்காது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் பல்வேறு அரசியல் சூழ்நிலையால் மீண்டும் திமுக - காங்கிரசுடன் தனது கூட்டணியை அறிவித்தது. 

தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் கேட்பதாக செய்திகள் வெளிவருகிறது. 

இதனை கண்ட இணையதள நெட்டிசன்கள் 70 வருடகாலங்களாக திராவிட முன்னேற்ற கழகம் செய்த பெரும் சாதனை என்று கலாய்க்கும் வகையில்., #மண்டியிட்டதிமுக என்ற பதிவேடை ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாக வைத்துள்ளனர். அதற்கான பதிவுகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.  














இணையதள நெட்டிசன்கள் இவ்வாறாக தங்களின் திறமையால் #மானங்கெட்டதிமுக என்ற ட்விட்டர் டேக் பதிவேடை வைரலாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

now twitter trending on Mk Stalin parliament election mandiyittadmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->