பிரியாணி தருவதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு அழைத்துச்சென்று, புளியோதரையில் முட்டை வைத்து ஏமாற்றிய கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


பிரியாணி தருவதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு  அழைத்துச்சென்று, புளியோதரையில் முட்டை வைத்து ஏமாற்றிய கொடூரம் நெல்லையில் நடந்துள்ளது.

திருநெல்வேலியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஆடம்பரம், அதிக பொருட்செலவு, அரசுத்துறைகளின் சுறுசுறுப்பு என்று பல்வேறு அம்சங்களும் தென்பட்டன. ஆனால், விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் உள்ளார்ந்த எழுச்சியைப் பார்க்க முடியவில்லை.

தமிழகத்தில் மாவட்டங்கள்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிக பொருட் செலவில் நடத்தப்படுகிறது.

23-வதாக திருநெல்வேலியில் இவ்விழா நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பெரும்பாலான அமைச்சர்கள் வருகையால் அத்தனை அரசுத்துறைகளும் கடந்த ஒருவாரத்துக்கு மேலாகவே சுறுசுறுப்புடன் விழா ஏற்பாடுகளில் அக்கறை செலுத்தின.

பாளையங்கோட்டையில் தொடர்ந்து மழை பெய்துவந்த நிலையில், விழா நடைபெற்ற இடத்தில் மணலை கொட்டி மேடாக்கி, எவ்வளவு மழை பெய்தாலும் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அரசுத்துறைகள் முடுக்கி விடப்பட்டன.

அதனை தொடர்ந்து காவல்துறையின் கெடுபிடி மக்களுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியிருந்தது.

கடந்த சில மாதங்களுக்குமுன் இதே பகுதியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கலந்துகொண்டபோது இதுபோன்ற கெடுபிடி இருக்கவில்லை.

வழக்கமாக எம்.ஜி.ஆர். பாடல்களை எந்த இடத்தில் பார்த்தாலும் அவரது விசுவாசிகள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து உற்சாகமடைவர்.

ஆனால் இந்த விழா மேடையில் பெரிய திரையில் அவற்றை ஒளிபரப்பியும் அரங்கில் எவ்வித சலனத்தையும் காண முடியவில்லை.

இதெல்லாம் விழாவில் ஒரு புறம் நடந்து முடிந்த நிலையில், பிரியாணியும் இருநூறு ரூபாய் பணமும் தருகிறோம் என்று மக்களை கூட்டத்திற்கு அழைத்து வந்து, புளியோதரையில் முட்டை வைத்து கொடுத்து மக்களை ஏமாற்றிய சம்பவமும் இடம்பெற்று இருக்கிறது.

இதனை அங்கிருந்த ஒருவர் தனது கைபேசியில் புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இன்று அது தமிழகத்தில் வேகமாக மக்களிடையே பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும், மக்களின் ஆர்வத்தை தூண்டி ஏமாற்றத்தை ரசிக்கும் இவர்களுக்கு எல்லாம் எப்படி நல்ல சோறு சாப்பிட மனது வருகிறது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MGR century function in nellai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->