கொல்கத்தாவில் இருக்கும் ஸ்டாலின்., தெறிக்கவிட்ட மீம் கிரியேட்டர்கள்.!  - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை வீழ்த்தி., பிற கட்சியிலான ஆட்சியை மலர செய்வதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல கட்சிகள் கல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். 

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் அவர்கள் தனது உரையை ஆற்றினார்., அந்த உரையில்., வங்காளத்தின் புலிகளுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்., சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு மேற்கு வங்கத்தின் பங்கை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் அறிந்த ஒன்று. 

அதனை போலவே., தற்போது இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுத்த மேற்கு வங்கத்தின் முதலைச்சர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று கல்கத்தாவிற்கு வந்துள்ளேன்., மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை காப்பதே இரண்டாவது சுதந்திர போராட்டமாகும். 

இந்தியாவின் கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 இலட்சம் வழங்குவேன் என்று சென்னையில் வைத்து கூறிய மோடி., மக்களின் தலையில் பெரிய கல்லை போட்டு விளையாடிவிட்டார். மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியானது ஊழல்வாதிகள் மற்றும் கார்பரேட்டுக்களின் ஆட்சி. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்ததை கண்டு மோடிக்கு பெரும் பயம் ஏற்பட்டுள்ளது. 

நமது ஒற்றுமையே மோடிக்கு பயத்தை வரவழைத்துள்ளது., நமது பயத்தின் மூலமாக மோடியை வீழ்த்தி., மக்களை பாதுகாப்போம். இந்தியாவின் பிரதமராக இருக்கும் மோடி., மம்தா பானர்ஜியை பார்த்தால் பயமடைவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. மோடியை நமது ஒற்றுமையால் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கல்கத்தாவில் உரையாற்ற தொடங்கியவுடன் இங்குள்ள மீம் கிரியேட்டர்கள் அனைவரும் தங்களின் வண்ணத்தருக்கேற்ப மீம்களை தயாரித்து அதனை வெளியிட துவங்கிவிட்டனர். பல காமெடி நிறைந்த மீம்கள் உங்களின் பார்வைக்காக... 









 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mem creators now develop mk stalin mems about kolkatha


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->