"என்ன மன்னிச்சிடுங்க" மார்க் ஜூகர்பெர்க்! - Seithipunal
Seithipunal


பேஸ்புக்கிலிருந்து 5 கோடி பேரின் தனிநபர்  தகவல்கள் திருடப்பட்டது உண்மையே! 'தவறு நடந்தது உண்மை தான்' என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

2016ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது பேஸ்புக் பயனாளர்கள் 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள்  கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் சோதித்து பார்த்ததும் தெரிய வந்தது. 

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் ஒரே அடியாக கவிழ்ந்தன. இதனையடுத்து இச்சம்பவம் பற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மவுனம் கலைத்துள்ளார். 

இதுகுறித்து  பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், தவறு நடந்ததை ஒப்புக்கொள்கிறேன்,  மேலும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும், வருங்காலங்களில் இது போன்ற தகவல் திருட்டுகள் நடக்காது எனவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட செயலிகளை பேஸ்புக் ஆய்வு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mark zuckerberg ask sorry to everyone


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->