இந்து மதத்தை அவமதிக்கும் விதமாக மதிமாறன் வெளியிட்ட ட்வீட்!! கொந்தளித்த இந்து அமைப்பினர்!!  - Seithipunal
Seithipunal


ஏற்கனவே, சாதிரீதியாக உணவுகளை பிரித்து சர்ச்சையைக் கிளப்பிய திராவிட கழகத்தைச் சார்ந்த மதிமாறன் அவர்கள், மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பிரச்சனையை கிளப்பியுள்ளார். 

தோசைகளை சாதி ரீதியாக பிரித்து இது உயர்சாதி தோசை இது தாழ்த்தப்பட்ட சமூக தோசை என்றும், அரிசியிலும் சாதியை பிரித்து பிறரின் கேளிக்கு ஆளான மதிமாறன், பின் கை கழுவும் இடங்களில், 'வெஜிடேரியன்கள் மட்டும் கைகழுவவும்' எனக் குறிப்பிட்டிருப்பது சாதியை அடையாளப்படுத்துவதாகக் கூறியது புதுவிதமான சர்ச்சையைக் கிளப்பியது.

இதனை தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இந்துக்களை அவமதிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். காதலர் தினமான இன்று இந்து அமைப்பினர் சிலர் காதலர் தினத்தை எதிர்த்து விலங்குகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது எதிர்ப்பை தெரிவித்தனர்.



 

அதை நக்கல் செய்யும் விதமாக மதிமாறன்," இந்து அமைப்புகளுக்கு நன்றி! சிவனின் அவதாரங்களில் ஒன்றான பைரவரின் வாகனமான நாய்க்கும் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான பன்றிக்கும், காதலர் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் இன்று திருமணம் செய்து வைத்தார்கள்" என ட்வீட் செய்துள்ளார்.



 

இது இந்து அமைப்பினருக்கு மிகவும் ஆத்திரத்தை உண்டாக்கும் விதத்திலும், இந்து கடவுள்களை அவமதிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது என அவரின் பதிவாய் ரிட்வீட் செய்து பலர் அதில் எதிர் கருது தெரிவித்து வருகின்றனர். 



 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhimaran says about animals marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->