சைடு சக்கரங்களை தூக்கி வீலிங் விட முயற்சிக்கும் அரசு பேருந்து.. குலதெய்வத்தை கும்பிட்ட பொதுமக்கள்..!! (வீடியோ) - Seithipunal
Seithipunal


போகிற போக்கை பார்த்தல் தமிழக அரசு பேருந்துகளை வைத்து வித்தை காட்டியே, நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை தூக்கி நிமிர்த்தி விடலாம் என்று தோன்றுகிறது.

பொதுவாக காற்றில் பறக்கும் கூரையும்,  பஸ்சுக்குள் மழை பற்றிய செய்திகள் தான் வெளிவந்து பார்த்திருப்போம்.

இப்போதெல்லாம் தினம் தினம் புதுசு புதுசா, தினுசு தினுசா ஒன்னு கிளம்பி விடுகிறது. கடலில் கப்பல் தரை தட்டித்தான் பார்த்திருப்போம், இன்றைக்கு பேருந்து படியே தரை தட்டும் அளவிற்கு சென்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா..?

கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பேருந்தில் தான். இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. பயணிகள் கூட்டம் இல்லை அதனால் தான் நஷ்டத்தில் ஓடுகிறது போக்குவரத்து துறை என்று அரசு காரணம் கூறுகிறது. ஆனால் இங்கு நடப்பதை பார்த்தல் இப்படி ஓடியும் எவ்வாறு நட்டம் ஏற்பட்டது என்று யோசிக்க வைக்க தோன்றுகிறது.

கோவை-சத்தியமங்கலம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்து ஒன்று கடந்த சில தினங்களுக்கு, முன்பு அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று இருக்கிறது.

படிக்கட்டுகளிலும் பயணிகள் நின்று பயணித்த காரணத்தால், ஒரு பக்கம் முழுவதுமாக தரை தட்டுவதை போல கீழிறங்கி விட்டது. ஏதாவது வளைவில் கொஞ்சம் வேகமாக திருப்பினாலும் கவிழ்ந்து விடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆரம்பத்தில் ஏறிய பயணிகள் கூட்டத்தினால் நகர கூட முடியாமல், பேருந்து நிறுத்தம் வரும் வரையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணித்தனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kovai to skthi govt bus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->