ஓட்டுக்காக திமுக இதனை கூட செய்யுமா?! குறியீடு மூலம் ஓட்டு கேட்கும் கனிமொழி!  - Seithipunal
Seithipunal


தேர்தல் வந்துட்டா நாங்க என்ன வேஷம் வேண்டுமானாலும் போடுவோம் என்பது அரசியல்வாதிகளின் ஸ்டைல், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஆரம்பித்தது முதலே இந்த முறை அதிகமாக விமர்சிக்கப்படுவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் தான். ஏனெனில் அந்த கட்சியின் கொள்கைகளை அந்த கட்சியினரே  மதிக்கவில்லை என்பது தான் விசித்திரமானது. 

கடவுள் மறுப்பு கொள்கையை பேசும் அவர்கள் அனைவரும் தினந்தோறும் ஆலயங்களிலும் தேவாலயங்களிலும் வழிபட்டுவிட்டுத்தான் பிரச்சாரத்தை தொடங்குகிறார்கள், அடுத்தபடியாக மத மறுப்புக் கொள்கை குறிப்பாக, இந்து மதத்திற்கு எதிராக அண்மை காலங்களில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் பரவலாக, தமிழகம் முழுவதும் அனைவருக்குமே தெரியவர எங்கே இந்துக்களின் வாக்குகள் சிதறி விடுமோ என்ற அச்சத்தில் மு க ஸ்டாலின்  இந்துக்களுக்கு நாங்கள் எதிரிகள் என ஒவ்வொரு கூட்டத்திலும் புலம்பி வருகிறார். 

அதனைப் போலவே இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த சாதியை பார்த்து வேட்பாளர்களை ஒதுக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே தமக்கு சாதகமாக உள்ள, தன் தாயாரின் சாதியை சார்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாக தூத்துக்குடியை திமுக மகளிரணி தலைவி, மு க ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி தேர்ந்தெடுத்தார். அவரும் இந்துக்களுக்கு எதிரான, இந்து மத சடங்குகளுக்கு எதிரான பல பேச்சுக்களை மேடைப் பேச்சுக்களை பேசி உள்ளவர்.  எங்கே இந்துக்கள் வாக்குகள் வராமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள் போல பேச ஆரம்பித்துள்ளார். மேலும் ஆலயங்களில் சென்று வழிபடுதல் போன்ற செயல்களிலும் ஈடுபட ஆரம்பித்தார். 

இந்நிலையில் பெரியாரின் கொள்கை வாதிகள் என்று கூறிக் கொண்ட கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெரியாரின் போட்டோவை  தான் இத்தனை நாளாக கவர் போட்டோவாக வைத்திருந்தார். இந்நிலையில் வாக்குக்காக, அங்கே வாழும் மக்களின் சாதி  சின்னமாக, அவர்களின் முதன்மை தொழிலாக பார்க்கப்படும் பனைமரம் போட்டவை வைத்து அவர்களின் வாக்குகளை கவர்வதற்காக வைத்துள்ளார். 

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெரியரையே விட்டுக் கொடுத்துள்ளார் கனிமொழி. தேர்தல் என்று வந்துவிட்டால் பெரியார் என்ன, ஒட்டு தான் முக்கியம் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன என்று கனிமொழி பெரியாரை தூக்கி ஓரம் வைத்து விட்டார். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் கதையாக, பெரியாரும் அவரது கொள்கைகளும் இந்து மத எதிர்ப்பும்  திமுக தலைவர்களில் நாக்கிலேயே தாண்டவமாடும் என்பது அனைவரும் அறிந்ததே. 

ஏனெனில் அவர்கள் காலங்காலமாக ஒவ்வொரு தேர்தலுக்கும் இதுதான் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் இந்த முறை வெளிப்படையாக அப்பட்டமாகவே திமுக கடுமையான விமர்சனங்கள் சந்தித்து வருவதால் இந்துக்களின் வாக்குகள் முழுமையாக அவர்களுக்கு கிடைக்குமா? தேர்தல் நேரத்தில் மட்டும் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள் போல  பேசுவதால் மக்கள் அதனை நம்புவார்களா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தேர்தல் முடியும்வரை பெரியாரின் கைத்தடி, பெரியாரின் மூக்கு கண்ணாடிக்கு தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து ஓய்வு கொடுத்தார் கனிமொழி. கருணாநிதியின் அனைத்து ராஜதந்திரங்களையும் கரைத்து குடித்திருக்கிறார் கனிமொழி. ஸ்டாலின் போல மேடைக்கு மேடை புலம்பாமல் கனிமொழி யாருக்கும் தெரியாமல் கப்சிப் என சாதி ஓட்டுகளை கவர் செய்துவிட்டார். இப்போ பெரியார் வாதிகள் எல்லாம் சைலன்ட் மோடுக்கு சென்றுள்ளார்கள். தேர்தல் முடிந்த பிறகு தான் வெளியே வருவார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanimozhi twitter cover photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->