ஜப்பானை கதிகலங்க வைத்த ஸ்டாலின்..! இது என்ன ஜப்பானுக்கு வந்த சோதனை.!! ஸ்டாலினை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையின் வண்ணாரப்பேட்டை முதல் டி.எம்.எஸ் வரையிலான புதிய மெட்ரோ ரெயில் வழித்தடத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதிலிருந்து தொடா்ந்து 4 நாட்களுக்கு மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. 
 
மெட்ரோ ரெயில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேர் பயணிக்கிறார்கள் எனத் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று ஞாயிறு இரவு முதல் சமூக வலைத்தளங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் சேவை பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் அவர், "போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடத்துக்கான டெண்டர் தொடர்பாக நான் ஜப்பான் நாட்டிற்குத் துணை முதல்வராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன்." என்று கூறினார்.

ஜப்பான் நாட்டிற்கு துணை முதல்வராக இருந்தபோது என ஸ்டாலின் உளறிவைத்திருப்பதை கவனித்த நெட்டிசன்கள், டுவிட்டரில் #ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி கிண்டல் செய்து வருகிறார்கள். 














 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

japan deputy chief minister stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->