விசிக, கொங்கு மக்கள், முஸ்லீம் கட்சியுடன் கூட்டணி வைச்சவங்க எல்லாம் சாதி, மத கூட்டணி என விமர்க்கலாமா?! ஸ்டாலினை விளாசி தள்ளிய தலைவர்!!  - Seithipunal
Seithipunal


முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக-பாமக-பாஜக கூட்டணியை மிக மோசமாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், தான் ஒரு அரசியல்வாதியா என நினைக்கும் அளவிற்கு தரம்தாழ்ந்த வார்த்தைகளை உபயோகிப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஆனால், அதை பற்றியெல்லாம் அவர் கவலைபட்டதாக தெரியவில்லை. நேற்றும் அவரது விமர்சனங்கள் தொடர்ந்தது. அதாவது ஸ்டாலின்," வருகிற தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் இதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது" என்றும் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து, தனது ட்வீட்டர் பக்கத்தில், "திமுக காங்கிரஸ் அமைத்திருக்கும் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார் மோடி.

மோடி அவர்களே! அதிமுக பாமக பாஜக கூட்டணிதான், மதவாத -சாதியவாத -சந்தர்ப்பவாத கூட்டணி. அதிகாரத்தை தக்கவைத்து கொள்ளையடிப்பது உங்கள் இலட்சியம். உங்களை விரட்டி நாட்டைக் காப்பாற்றுவதே எங்கள் இலட்சியம்!" என கூறியுள்ளார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, எச்.ராஜா, " ஆமாம்  முஸ்லிம் லீக் மதசார்பற்ற கட்சி. விசிக மற்றும் கொங்கு மண்டல தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இதெல்லாம் சாதிகட்சிகள் இல்லையா வாய்ப்பு புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசுவதா" என கூறியுள்ளார். 



விசிக மற்றும் கொங்கு மண்டல தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி சாதி கட்சிகளுடனும், முஸ்லிம் லீக் போன்ற மதவாத கட்சிகளுடனும் கூட்டணி வைத்து கொண்டு இவர் அதிமுக கூட்டணியை சாதிய, மதவாத கூட்டணி என விமர்சிக்க தகுதி வாய்ந்தவரா? என அவர் கேட்டிருப்பது ஸ்டாலினிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H.raja tweet about stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->