GoBackModi என்பது ட்ரெண்டாக்கப்பட்டது இங்கிருந்து தான்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!   - Seithipunal
Seithipunal


GoBackModi என்பது ட்ரெண்டாக்கப்பட்டது இங்கிருந்து தான்!! வெளியான அதிர்ச்சி தகவல்!!  மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வந்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளமான ட்வீட்டர் வலைத்தளத்தில் #GoBackModi என்ற ஹாஷ்டாக், சென்னை, இந்திய, உலக அளவில் ட்ரண்ட் ஆகியது.

சில கட்சிகள் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் வருகிறது. இந்நிலையில், கடந்தமுறை goback போலவே welcomemodi என்பதும் டிவிட்டரில் ட்ரெண்டாக்கபட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, இது போல goback என பதிவிடுவது யார் எங்கிருந்து என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர், அதிக அளவில் அது பாகிஸ்தான் மற்றும் இதர நாடுகளில் இருந்து தான் என்றும், தமிழகத்தில் ஒருசிலரே இவ்வாறு பதிவிடுகின்றனர் என்றும், நாளிதழ் ஒன்றில் புத்தகபதிப்பாளர் ரெங்கநாதன் தகவல் வெளியிட்டதாக கூறியிருந்தனர். 


இதுகுறித்து, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில், "மோடி கோ பேக் " தமிழக கோஷம் அல்ல என்கிற உண்மையை தமிழகத்தில் எங்கு சென்றாலும் உணர முடியும். நாம் யோசிக்க வேண்டிய விஷயம் இந்த அந்நியச் சக்திகளுடன் திமுக கூட்டணியினர் கைகோர்த்துள்ளது தான். இந்தத் தேர்தலில் இக்கும்பலை வேரோடு வீழ்த்துவதுதான்." என கூறியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hraja says where goback modi trend


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->