இந்த விசயம் தெரியாம லட்சுமிய கெட்டவனு நெனைச்சிட்டீங்களே.!! அவ ரொம்ப நல்ல பெண் தெரியுமா? யாரும் அறிந்திராத ரகசியங்கள்.!! - Seithipunal
Seithipunal


பெண்ணின் எதார்த்தமான வாழ்க்கையை பற்றி வெளிவந்த 'லட்சுமி' திரைப்படம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச அளவில் பல விருதுகளை வென்றிருக்கும் இந்த குறும்படம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற, 'சினி பேஸ்ட்' விழாவில், அரையிறுதி சுற்று வரை வெற்றி பெற்றது. 

இந்த படம்  வெளியானதும் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த குறும்படத்தில், எப்போதும் போல் ஒரே மாதிரியான வாழ்க்கை வாழும் லட்சுமி, அவளது கணவரால் தாம்பத்திய உறவில் கூட மகிழ்ச்சியில்லாத மனைவியாக நடத்தப்படுகிறாள்.

இந்த நிலையில், வேறு ஒரு ஆண் அவளை கவர, அவனுடன் உடலுறவு கொண்டு வீடு திரும்பிகிறாள். இது தான் லட்சுமி குறும்படத்தின் கதை. 

சமூக வலை தளங்களில், இரு வேறு வகையான விமர்சனத்தையும் சந்தித்தது இப்படம்.

பெரும்பாலும், நடத்தை கெட்ட பெண்ணை லட்சுமி குறும்படம் நியப்படுத்துகிறது.., என்று இளைஞர்கள் வசை பாடுகின்றனர்.

ஆனால், படத்தில் இதையெல்லாம் கவனித்தால், லட்சுமியை கெட்டவள் என்று கூற சற்று யோசிப்பார்கள்..

படத்தில் வரும் கருப்பு வெள்ளை காட்சிகள் :

படத்தில், கணவருடன் வரும் காட்சிகளை கருப்பு வெள்ளையிலும், தன் கள்ளக் காதலுடன் வரும் காட்சியை கலரிலும் காட்டியிருப்பார் இயக்குனர். 

இது, அவளது கணவருடன் வாழ்ந்தது நிகழ்காலமாகவும், அவளது கள்ளக்காதலனுடன் வாழ்ந்தது கடந்த காலமாகவும் காட்டியிருப்பார் இயக்குனர்.

பொதுவாக கடந்த கால நிகழ்வுகளை கருப்பு வெள்ளையில் காட்டுவது வழக்கம், ஆனால் இந்த படத்தில் அதற்கு எதிராக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

கனவனின் கள்ளத் தொடர்பு :

தனது கணவன் வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் என்பதை அறிந்த லட்சுமி, தூங்கும் போது அதனை நினைத்து அழுவாள்.

அதன் பின்னர், கணவன் இப்படி இருந்தால்.., யாருக்குத் தான் தப்பு செய்யத் தோனாது..? என ஒரு காட்சி வைத்திருப்பார் இயக்குனர்.

மேலும், ஆசையில்லாமல் கணவர் லட்சுமியுடன் வைத்துக்கொள்ளும் உடலுறவும் கூட அவளுக்கு போதாதது போல் இயக்குனர் காண்பித்திருப்பார். 

இதனால் கூட, அவள் அன்று இரவு வழி மாறி போய்விட்டார் எனவும் நியப்படுத்தி இருப்பார்  இயக்குனர்.

என்ன இருந்தாலும், கண்ணியம் காப்பாற்ற திருந்திய லட்சுமி, படத்தில் அந்த இரவு முடிந்து அடுத்த நாள் லட்சுமி பஸ்சில் செல்வதாக கூறுவார். 

என்னதான் அன்று இரவு உணர்ச்சிகளையும், ஆசைகளையும், கட்டுப்படுத்த இயலாமல் லட்சுமி அப்படி சென்று இருந்தாலும், இனிமேல் இப்படி நடந்து விடக் கூடாது என லட்சுமி முடிவெடுக்கிறாள்.

அதனால் தான், அவளது கள்ளக் காதலனை தவிர்ப்பதற்காக, தினமும் ட்ரெய்னில் செல்லும் அவள் அன்றிலிருந்து பஸ்சில் செல்வாள்.

லட்சுமி செய்தது தவறு தான்..., ஆனால் இப்போது கூறுங்கள்.., லட்சுமி நல்லவளா...? இல்லை கெட்டவளா...?

 

லட்சுமி குறும்படம் உங்களுக்காக...

https://youtu.be/vP5dOY42DKI


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakshmi short filim


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->