ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு..? : ஹெச்.ராஜாவால் டிவிட்டரில் களேபரம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

அவருடைய இந்த நடவடிக்கைக்கு, தினகரன் அணி உட்பட எதிர்கட்சிகள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ஆளுநரின் அதிகாரத்தையே பயன்படுத்தாமல், ஆட்சி அதிகாரங்களை கையில் எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியும் வருகின்றனர்.

ஆனால், எதிர்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மற்றும் எடப்பாடி அணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளுநர் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை எதிர்கட்சிகள் முடிவு செய்யக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆளுநரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், 'தனது ஆய்வுக் கூட்டங்கள் மற்ற மாவட்டங்களில் தொடரும் என மேதகு ஆளுநர் கூறியுள்ளார். தொடர வேண்டும் என்பதே மக்களுடைய எதிர்ப்பு' என்று கூறியுள்ளார்.

மக்கள் எதிர்ப்பு என்று தவறாக இருந்ததால், உடனே அந்த பதிவை நீக்கிவிட்டு, எதிர்ப்பார்ப்பு என்று மாற்றி புதிய பதிவை பதிவிட்டுள்ளார்.

ஆனால், நெட்டிசன்கள் முதலில் போட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு, தலைவரே ஸ்கிரீன் ஷாட் எடுத்துட்டேன் என்று பிழையான பதிவை பதிவிட்டு கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

அரவிந்த் ராஜ் என்பவர், 'எழுத்து பிழையா அல்லது மக்கள் எதிர்பது பிழையா? தாங்கள் சொல்ல வருவது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முட்டாள் பையன் என்ற ஐடியில் இருப்பவர், 'எப்ப பாரு எதிர்ப்பு பற்றியே பேசுறது. இருக்குறது தானே வரும், தமிழே தெரியாமல் தமிழ்நாட்டுல குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறாங்க' என்று சந்தானத்தின் படத்தை பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Rajas mistaken in tweet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->