தல பட பாடலுக்கு குத்தாட்டம் போடும் தலரசிகைகள்.,வீடியோ!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி அதிகாலை 03:40 மணியளவில், விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இயக்குனர் சிவா, அஜீத் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம்.

இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்துடன் 4 ஆவது முறையாக நயன்தாரா இணைந்து நடித்துள்ளார். 

அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் இரண்டாம் பார்வை ( Second look) வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, நவம்பர் 25 ஆம் தேதி எந்த ஒரு முன்னறிவிப்பின்றி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து, படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், பிரமாண்ட ட்ரெய்லரை டிசம்பர் 30 ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது படக்குழு. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான நாள் முதல் இது நாள் வரை படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பு வந்தாலும், ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.  

இந்நிலையில், விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இதனை தொடர்ந்து திரையில் வெளியிடப்பட்ட விசுவாசம் படத்தின், " வேட்டிக்கட்டு" பாடலுக்கு அரங்கின் முன் நின்று இளம்பெண்கள் குத்தாட்டம் போடுவதை போன்ற வீடியோ எடுக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. 

தன்னை மறந்து உற்சாகத்தில் ஆடும் பெண்கள் தல அஜித்குமாரின் மீது எவ்வளவு பற்று வைத்துள்ளனர். என்றும் விசுவாசம் படத்தின் மீது எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருந்தது என்றும், இந்த குத்தாட்டத்தை வைத்தே நாம் புரிந்து கொள்ள முடியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls dance in theatre in front of viswasam movie song


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->