ராகுவும், கேதுவும் என்னென்ன விஷயங்களில், நமக்கு தீங்கு செய்யும்…? இதைப் படித்தால், நீங்கள் உஷாராக இருக்கலாம்…! - Seithipunal
Seithipunal


 

ராகு-கேது பெயர்ச்சியினை அடுத்து, சிலருக்கு ராகுவும், சிலருக்கு கேதுவும் துணை புரிகின்றன என்றும், பலருக்கு தோஷம் உள்ளதாகவும் சோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ராகு மற்றும் கேது சார்ந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டால், நாம் சுதாரித்துக் கொள்ளலாம்.

நவகிரகங்களில் ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள்…!

ராகு –

அசுப கிரகம். பாம்பின் தலைப் பகுதி தான் இதன் உருவம். இதன் காரகங்கள் –

சனியின் காரகங்கள், ஆவிகள், பேய் பிசாசுகள், மாந்தரீகம், செய்வினை, பெரிதாக்குவது (நல்லது கெட்டது இரண்டையும்), விகாரம், விஷம உணர்வுகள், மது, போதைப் பொருட்கள், மலட்டுத் தன்மை, ஓரினச் சேர்க்கை, கூட்டுக் கலவி, ரத்த பந்தக்களுக்கிடையே ஏற்படும் தகாத பாலின உணர்வுகள், வெளி நாடு, அந்நிய மதங்கள், சினிமா, மின்சாரம், பெரிய அளவிலான திருட்டு, ஆள் கடத்தல், வெளி நாட்டு சதி, கூட்டு மரணங்கள், சிறைச்சாலை, வெளி நாட்டுத் தொடர்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மிகைப் படுத்துதல், மோசடி வித்தைகள், வழக்கத்திற்கு மாறான செய்கை, புற்று நோய், அலர்ஜி, அகன்ற பாத்திரங்கள்.

இவை எல்லாம் ராகுவின காரகங்கள். ராகு பாதிப்பு உள்ளவர்கள், மேலே சொன்ன செய்திகளைப் படித்து, அதில் கவனமாக இருக்க வேண்டும்.

கேது –

ஞானகாரகன் – அசுப கிரகம் – பாம்பின் வால் பகுதி தான் உருவம் –

சிதைப்பது, அறுப்பது, துண்டிப்பது, சிறுமைப் படுத்துவது, உடைப்பது, அரிப்பது, விஷம், போதைப் பொருட்கள், நாட்டை சீர் குலைப்பவர்கள், கலகக் காரர்கள், மிரட்டுபவர்கள், வெடிகுண்டு, பட்டாசு, அமிலம், சட்டத்திற்குப் புறம்பான அனைத்து செயல்கள், கம்பி, நார்கள், கயிறு, உடலின் குடல் பகுதி, சதி வேலைகள், நெருக்கடி, பிரிவினை வாதம், விவாகரத்து உள்ளிட்டவை கேதுவின் காரகங்கள்.

இதனை இனம் கண்டு, விலக வேண்டும். அப்போது தான், கேதுவினால், ஏற்படப் போகும் தீமைகள் விலகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

features of Rahu and Kedhu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->