திமுகவிற்கு இந்த அவமானம் தேவையா? இந்த விளம்பரம் தேவையா? கைக்கூலிகளால் கேலிக்கூத்தாகும் ஜனநாயகம்!  - Seithipunal
Seithipunal


இன்று காலை தமிழரசு என்ற முன்னாள் பாமக சட்டமன்ற உறுப்பினர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். அதனை குறிப்பிட்டு சில பத்திரிக்கை வலைத்தளங்கள் "பாமகவின் முக்கிய புள்ளி திமுகவில் இணைந்தார்!" என்கிற தலைப்பில் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் உண்மை என்பது வேறாக இருக்க, குறிப்பிட்ட இயக்கத்தை சிறுமை படுத்தும் விதமாக திட்டமிட்டு தவறான தகவல் எழுதப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கட்டுரையானது, "பாமகவின் துணைப் பொதுச்செயலாளர் ஓமலூர் தமிழரசு என்பவர் பாமகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்" என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டின் ஊடகங்களில் ஊடுருவியிருக்கும் 'டபுள் ஏஜெண்டுகளின்' அப்பட்டமான ஊடக விபச்சாரம் இதுவாகும்!

ஓமலூர் தமிழரசு என்பவர் 22.07.2017 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் தாமாகவே விலகிக் கொள்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, 17.08.2017 அன்று பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் "பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகிவிட்ட ஓமலூர் தமிழரசுவிடம் கட்சித் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது" என்று தெரிவித்தார்.

ஆனால், ஊடக டபுள் ஏஜெண்டுகள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் "பாமகவில் முக்கிய பதவியில் இருக்கின்ற ஓமலூர் தமிழரசு திமுகவில் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அன்புமணி ராமதாஸிற்கும், தமிழரசுவிற்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது" என்று எழுதியுள்ளனர்.

ஆக மொத்தத்தில், 2017 ஆம் ஆண்டிலேயே பாமகவை விட்டு விலகிச் சென்ற ஒருவர், அவரோடு கட்சியினர் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என பாமக தலைமை 2017 ஆம் ஆண்டிலேயே அறிவிப்பு வெளியிட்ட நிலையில் - "பாமகவில் முக்கிய பதவியில் இருக்கின்ற நபர் இன்று திமுகவில் இணைந்தார்" என எழுதியுள்ளனர்.
இது அப்பட்டமான ஊடக அறத்திற்கு எதிரானது. 

தமிழ்நாட்டின் ஊடகங்களில் பணியாற்றும் சிலர், மருமகனிடம் இரட்டிப்பு சம்பளம் வாங்கிக்கொண்டு 'ஊடக ஊடக அறத்திற்கு எதிராக' ஈடுபட்டுள்ளனர். இது முன்னணி ஊடகங்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் துரோகச் செயல் ஆகும்.

காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற இழி நிலைக்கு போய்விட்ட இவர்கள், மருமகன் தூக்கி வீசும் காசுக்காக பாமகவை தாழ்த்தி எழுதுவதை ஒரு முழு நேர வேலையாக செய்து வருகின்றனர். அதில் ஒரு அங்கம் தான் "பாமகவில் முக்கிய பதவியில் (தற்போது) இருக்கின்ற நபர் ஒருவர், திமுகவில் இணைந்துள்ளார்" என்று எழுதுவதாகும்!

ஊடகங்களின் நற்பெயருக்கு களங்கம் விலைவிக்கும் இவர்கள், மருமகனின் காலை நக்குவதற்கு பதிலாக, வைகோ சொன்ன 'ஆதி தொழிலையே' நேரடியாக செய்வது மேலானதாக இருக்கும். அதுதான் ஊடக தர்மத்தை காக்கவும் ஜனநாயகத்தை காக்கவும் உதவியாக அமையும்!

குறிப்பு:  ஒரு குறிப்பிட்ட தனியார் இணையம் மட்டும் தான் "தமிழரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்" என்பதை குறிப்பிட்டுள்ளது. மற்றவை இந்த உண்மையை மறைத்துள்ளன. என்று அந்த கட்டுரை முடிகிறது. 

ஊடக துறையில் தவறாக செயல்படும் சில நபர்களால் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகத்துறைக்கு கடந்த சில காலங்களாகவே அவப்பெயர் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது போன்று தொடர்ச்சியான ஒரு பக்க சார்பு நபர்களால் ஊடக அறம் கேலிக்கூத்தாகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் கட்சிக்கு ஒரு சார்பு ஊடகம் என்ற நிலை தான் என்பதையும் மறுக்க முடியவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

false news from news channels support of one party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->