பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பேஸ்புக் போலிகளை தவிர்க்க புதிய யுக்தியை கொண்டு வரும் பேஸ்புக் நிறுவனம்!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் முகநூல் மூலம் பரப்பப்படும் பொய்யான செய்திகளை தடுக்க முகநூல் நிறுவனம் ஐந்து புதிய நிறுவங்களை பணியமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

முகநூல் மூலம் அதிகப்படியான போலி செய்திகள் பரப்பப்படுகிறது. மேலும், போலி ஐடியை பயன்படுத்தி பல்வேறு வதந்திகளை பரப்பிவிட்டு சிலர் சர்ச்சையை கிளப்பிவிடுகின்றனர். இதனை தடுக்க முகநூல் நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், சிறிது நாட்களில் பாராளுமன்ற தேர்தல் வேறு நடக்க இருப்பதால், இச்சயமத்தில் வதந்திகளை கட்டுப்படுத்த முகநூல் நிறுவனத்திற்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. 

இதனை தொடர்ந்து இவ்வாறான போலி செய்திகளை தடுக்க முகநூல் நிறுவனம் புதிய சில நிறுவனங்களுடன் இனைந்து பணியாற்றி வருகிறது. 

அந்த நிறுவனங்கள், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மராத்தி, மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் உள்ள செய்தியின் உண்மை நிலை, புகைப்படம் மற்றும் காணொளிகளிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முயல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

facebook has new update for indian election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->