அத்திப்பட்டி கூட இருக்காம்! ஆனால் அந்த ஊரு வேலூர் வரைபடத்திலே இல்லையாம்! திமுகவின் முரட்டு முட்டு! ஆதாரத்துடன் வைக்கப்பட்ட குட்டு! - Seithipunal
Seithipunal


கடந்த 29 ஆம் தேதி இரவு 10 மணிக்கு திடீரென வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் துரைமுருகன் வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, பணம், பரிசுப்பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் படி, வேலூர், காட்பாடி அருகே காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள துரைமுருகன் வீட்டில் சோதனையிட்டனர்.

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துரைமுருகன் வீட்டில், 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளியில் 3 அதிகாரிகளும், கல்லூரியில் 4 அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து, துரைமுருகன் வீட்டில் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் சோதனை நிறைவுப் பெற்றதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை துரைமுருகனின் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான குடோனில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில், கட்டு காட்டாக ரூபாய் நோட்டுகள், மூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட அனைத்து பண கட்டுகளிலும் தொகுதி வாரியாக, வார்டு எண்கள் எழுதப்பட்டு தயாராக வைக்கப்பட்டு இருந்தது. 

"ஓட்டுக்கு பணம்" என அனைத்து தரப்பில் இருந்தும் செய்திகள் பரவ அதனை சமாளிக்க திமுக இணையதள பிரிவினர் பித்தலாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த குற்றச்சாட்டுகளை சமாளிக்க கொடுத்த முட்டனது முரட்டு முட்டு என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. 

மூட்டை மூட்டையாக சிக்கிய பணக்கட்டுகளில் ஒரு கட்டு பணத்தின் மீது - பி.என்.பாளையம் என்று இருப்பதை சுட்டிக்காட்டி - பி.என் பாளையம் என்கிற ஊர் கோவையில் இருக்கிறது என்று திமுகவினர் முட்டு கொடுக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் இந்த ஊர் - வேலூர் நாடாளுமன்ற தொகுதி, கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் 201 ஆவது பாகத்தில் உள்ள பி.என்.பாளையமும் (பொம்மிநாயக்கன் பாளையம்), அதில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் வார்டு ஆகும். ஆனாலும், தொடர்ந்து உண்மையை மறைத்து - முரட்டு முட்டு கொடுக்கிறது திமுகவினரின் வேலையாக இருக்கிறது. 

இன்று மதியம் தான் மத்திய சென்னை பாமக வேட்பாளர் திமுகவின் இணையதள பிரிவு முகத்திரையை கிழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk it wing create rumors


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->