யாரிடம் போய் இந்த அவலத்தை சொல்வது..? டேங்கோட விலையே சில ஆயிரம் தான் வருமே.. இதை பழுது பார்க்க 50 ஆயிரமாம்..!! - Seithipunal
Seithipunal


தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் எங்கு என்ன நடக்கிறது என்று உடனுக்குடன் அனைத்து மக்களுக்கும் தெரிந்து விடுகிறது.

முன்பெல்லாம் ஒரு செய்தியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், எப்ப செய்தி போடுவார்களோ என்று வானொலி பெட்டி முன்னரோ அல்லது தொலைக்காட்சி பெட்டி முன்னரோ விழுந்து கிடக்க வேண்டும்.

இப்போது அப்படியா..? ஒரு தட்டு தட்டினால் வாட்ஸ்ஆப்பிலேயே ஒரு செய்தி பல இலட்சம் மக்கள் வரை சென்றடைந்து விடுகிறது. இதில் வதந்திகள் பரவுவது ஒரு புறம் இருந்தாலும், சில சமூக அநியாயங்கள் இதன் மூலம் தட்டி கேட்கப்பட்டு தண்டனைகளும் வாங்கி தரப்படுகிறது.

இலஞ்சம் வாங்கும் பல அதிகாரிகளும் இதன் மூலம் சமீப காலமாக மாட்டிக்கொள்வது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் செய்த காரியம் வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் துசி. மோகன் தனது சொந்த செலவில் மினி டேங்கை ரூபாய் ஐம்பதாயிரம் செலவில் பழுது பார்த்ததாக குறிப்பிட்டுள்ள புகைப்படம் தான் அதற்கு காரணமாகும்.

சில ஆயிரம் ரூபாயில் புதிதாக கிடைத்து விடும் மினி டேங்க். ஆனால் அதை பழுது பார்க்க தன் சொந்த செலவில் ஐம்பதாயிரம் அளித்து பழுது பார்த்தாக குறிப்பிட்டுள்ளது ஆட்சி எந்த இலட்சணத்தில் உள்ளது என்பதை பறைசாற்றுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corrupted ruling party of tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->