இனி இதிலிருந்து தப்பிக்கவே வழி இல்லை, இந்தியாவே தெரியாமல் எடுத்துகொண்டது..? நாம் ஒவ்வொருவரும் நமக்கே தெரியாமல் அடிமையாகிவிட்டோம்..? - Seithipunal
Seithipunal


இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன், நாங்களும் மாறினோம்.. இன்று அதையே பேர்பிக்கோ (barbecue) என்று (kfc , Macdonald) கே.எப்.சி மற்றும் மெக்டொனால்ட் விற்கிறான்..

உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப்படுத்தினான்.. இப்போது உங்கள்  பற்பசையில் (salt + charcoal) உப்பு+கரி இருக்கா என்று கேட்கிறான்.

மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை  சிறப்பு விலையில் ஸ்டார் ஹோட்டலில் விற்கிறான்..

நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப்படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் ஸ்பெர்ம் ஏற்றுமதி செய்கிறான்.

இளநீர் , பதனீரைப் பருகினோம் கோக், பெப்சியை கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

கார்ப்பரேட்களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொன் மைகளைத் தொலைத்த இனமா நாம்?

நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செய்கிறேன் என்பது தான் கசப்பான உண்மை.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம், அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,
ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,

காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,

நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,

உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம். பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.

இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்குதே..!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corporate copied lot of things from TN people like toothpaste and pot food


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->