அரசு பேருந்தின் டயர் நிறைமாத கர்ப்பம்.! வெளியான வீடியோ காட்சியால் பரபரப்பு.!! அதிர்ச்சியில் பயணிகள்.!! - Seithipunal
Seithipunal


இன்றைய நவநாகரீக இணையதள வாழ்க்கையை வாழ்ந்து வரும் நாம்., நமது வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத சக்தியாக அலைபேசியை கொண்டு வந்துவிட்டோம். அந்த வகையில்., அந்த அலைபேசியின் மூலமாக தினமும் எங்கோ நடைபெறும் ஒரு பிரச்சனையையும்., நடைபெறும் பொழுது போக்கு வீடியோ காட்சி பதிவுகளையும் கண்டு கழித்து தான் வருகிறோம். 

பல்வேறு விதமான வீடியோ பதிவுகள் அலைபேசியின் மூலமாக ஒரு இடத்தில நடைபெறும் வீடியோ காட்சிகளை பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவிடவே., அந்தந்த வீடியோ காட்சிகளின் பதிவிற்கேற்ப ட்ரெண்டிங் ஆகிவிடுகிறது. 

தமிழகத்தின் அரசு பேருந்துகள் என்றாலே., இப்போதும் பெரும்பாலான மக்களின் எண்ணத்தில் ஓட்டை உடைசல் பேருந்துகள்., தரமற்ற பேருந்துகள் என்ற எண்ணம்தான் பலரது நினைவில் வந்து செல்லும்., தற்போது உள்ள அரசின் மூலமாக பல புதிய ரக பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு அதனை மக்கள் தொடர்ந்து உபயோகம் செய்ய பழகிய பின்னர்., அந்த எண்ணங்களில் இருந்து விடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில்., தமிழக அரசு பேருந்து ஒன்றின் பின்புற டயர்கள் ஆங்காங்கே வீங்கிய நிலையில் உள்ள வீடியோ காட்சிகளானது வெளியாகியுள்ளது., அந்த வீடியோ பதிவில் அரசு பேருந்தின் பின்புற டயரில் மூன்று இடத்தில் நிறை மாத கர்ப்பிணியை போன்ற தோற்றத்தில் டயர் உள்ளது. இதனை கண்ட நபர் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றவே., அந்த வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

விடீயோவின் முடிவு பகுதியில் அந்த பேருந்தின் எண் தநா72 நா 1870 என்று குறிப்பிடப்பட்டுள்ளது., அந்த வகையில்., தநா 72 என்ற வட்டாரபோக்குவரத்து எண்ணானது திருநெல்வேலி பகுதிக்கு உட்பட்டது என்பது தெரியவந்தது. இது குறித்த மேல் தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a govt bus Tyre caused a major problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->