மீடியாக்களை வறுத்தெடுக்கும் சி.ஆர்.பி.எப். வீரரின் நிதர்சனமான வீடியோ அறிக்கை…! - Seithipunal
Seithipunal


 

சி.ஆர்.பி.எப். வீரர் வெங்கடேசன் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது, சமூக வலைத் தலங்களில், வைரலாகப் பரவி வருகிறது.

அங்கு அவர்கள் அடைந்து கொண்டிருக்கும் துன்பங்களையும், இங்கு மீடியாக்கள் நடத்தும் பொறுப்பில்லாத நிகழ்ச்சிகளையும் பற்றி நெத்தியடியாகத் தாக்கிப் பேசி உள்ளார்.

“தமிழகத்திலே இருக்கிற மீடியாக்கள் எல்லாம், அரசியல் வாதிகளோ, நடிகர்களோ சொன்னால் தான் நியூசாப் போடுறீங்க. நாட்டிலே ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கு. ஆனால், ரஜினி நடந்தா அதைக் கூட, உங்க பிசினசுக்காக, நியூசாப் போடறீங்க…!

தினமும், வெட்டிப் பேச்சு பேசுறதுக்காக விவாத மேடை நடத்துறீங்க, இங்கே நாப்பது பேரு செத்துருக்காங்க. இதைப் பத்தி ஏதாவது விவாதம் பண்ணியிருக்கீங்களா? அவங்க குடும்பத்துக்கு ஏதாவது செய்யனும்னு யாராவது பேசியிருக்கீங்களா? இல்லையே..!

செத்தவங்க குடும்பங்கள் எல்லாம் இன்னிக்கு நடுத்தெருவிலே நிக்கிறாங்க. இன்னிக்கு யூ டியூப்லே ஒருத்தன் போட்டிருக்கான். “வெஜ் வேணுமா? எக்ஸ்பீரியன்ஸ் வேணுமான்னு? அதை லட்சக் கணக்கான மக்கள் பாத்துட்டு லைக் போடுறாங்க. அவுத்துப் போட்டு ஆடுறதையும், சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களையும் காட்டி நியூசாப் போட்டு காசு பாக்குறாங்க. எங்களைப் பாத்தா, ஏதோ, துாசைப் பாக்குற மாதிரி பாக்குறாங்க.

இளைஞர்கள் எல்லாம், இன்னிக்கு, சினிமாவாலே சீரழியுறாங்க. எங்க ஊரிலே, அடிப்படை வசதி இல்லேன்னு சொல்லி, பாத்துட்டு நியூஸ் போடுங்கன்னா வர மாட்டேங்குறாங்க.

ஒரு சினிமா நடிகரோ, நடிகையோ பேட்டி கொடுத்தா, அதை மட்டும், பெரிசா விளம்பரம் பண்ணிப் போடுவாங்க. பின்னே எதுக்குங்க மீடியா?”

என்று காரசாரமாகப் பேசி உள்ளார் வெங்கடேசன்.

இதே போல், “நீட் தேர்வில், சடையைப் பிடிச்செல்லாம் சோதனை பண்ணாங்க. ஆனா, 40 பேரோட பாதுகாப்பிலே கோட்டை விட்டாங்க” என்றும் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a c.r.p.f. soldier's statement against media


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->