பெண்கள் சொல்வதை கேளுங்க! ஈஸியா அட்ராக்ட் செய்யலாம்!!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு என்ன பிடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. 

உங்களுக்காகவே உளவியல் நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். 

இது புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்...

பெண்களைக் கவர முதலில் டேக் இட் ஈசி பாலிசியை வளர்த்துக்கொள்ளுங்கள். 

அதுதான் பெண்ணைக் கவர்வதற்கான முதற்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்ய ஆரம்பித்து கடைசியில் உள்ளதும் போய்விடும்.

தன்னம்பிக்கை கொண்ட ஆண்களால்தான், பெண்களை எளிதில் கவரமுடியும். 

எனவே எந்த சூழ்நிலையிலும் தலைகவிழ்ந்து பேசாதீர்கள். கண்களை நேருக்கு நேராக சந்தித்து பேசுங்கள். 

உங்களின் பேச்சு, நடவடிக்கை போன்ற அனைத்திலும் தன்னம்பிக்கை மிளிரட்டும்.

சிடுமூஞ்சித்தனமாவோ, ரிசர்வ் டைப் ஆகவோ இருப்பதை விட புன்னகையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு அதிகம் பிடிக்குமாம்.

அதனால், எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள். அதேபோல், உங்களுக்கு தெரிந்த அனைத்தையும் பேசி பெண்களை பயமுறுத்த வேண்டாம். 

அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ, அதை பற்றி முதலில் பேசி அசத்துங்கள். பின்னர் உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள்.

அதனோடு, பெண்கள் கூறுவதை காதுகொடுத்து கவனியுங்கள். நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே அவர்களின் மனதில் உயர்ந்து விடுவீர்கள். 

பெண்களின் கண்களை கூர்ந்து கவனியுங்கள் அப்புறம் நீங்கள் கூறுவதை அவர்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

காதலிக்காகவோ, மனைவிக்காகவோ பொது இடங்களில் சென்று காத்திருப்பதில் தவறில்லை. அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Only men with confidence can easily attract women


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->