தாம்பத்தியத்தில் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் விரிசல் குறித்த உண்மைகளை அறிவீர்களா நீங்கள்.!!  - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த துணைகள் இருவரையும் இணைக்கும் ஒரு பாலமாகவும்., அன்றாடம் ஏற்படும் கோபம்., வெறுப்பு., மறுபாடுள்ள சிந்தனைகள் போன்றவற்றில் இருந்து அவர்கள் பிரியாமல் இருப்பதற்கு உள்ள அறிய மந்திரம் மற்றும் மாந்திரீகம் தாம்பத்தியம். இரு மனதும் ஒன்றாரோடு இணைந்து தங்களின் வாழ்க்கை முழுவதிலும் அன்பென்ற மந்திரம் பொய்க்காமல் இருப்பதற்கு., தங்களின் சந்ததிகள் பெருகுவதற்கு உதவுகிறது.

இந்த தாம்பத்தியம் என்பது அனைத்து காலத்திலும் ஒரே மாதிரியான எதிர்பார்ப்பில் இருப்பது இல்லை., திருமணம் முடிந்த தம்பதிகள் தங்கள் துணையுடன் சேரும் ஒவ்வொரு தருணத்திலும்., பல்வேறு விதமான பிரச்சனையை எதிர்கொண்டு இணைகின்றனர். இந்த தருணத்தில் இருக்கும் தடையை யாரிடமும் கேட்கவும் இயலாது. 

ஏனென்றால் வீட்டில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நமக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அவர்களிடம் சொல்லியோ அல்லது அவர்களே முன் வந்து உதவுவதை பார்த்திருப்போம். ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தளவில் அவர்களிடம் கேட்கவும் முடியாது., அவர்களிடம் கேட்டாலும் நமக்கு புரியும் விதத்தில் அல்லாது நாசுக்காக பதிலை வழங்குவார்கள். 

இன்றுள்ள பெரும்பாலான தம்பதிகள் வீட்டில் இருக்கும் சமயத்தில் ஒருவர் கைகளில் அலைபேசி என்றும் மற்றொருவர் கைகளில் தொலைக்காட்சியின் ரிமோட் என்று இருக்கின்றனர். அன்றைய காலகட்டத்தை போல் அல்லாமல் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறையில் முன்னேறியுள்ள நாம்., தாம்பத்தியம் தொடர்பான பல சந்தேகங்களுக்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கிறோம். 

நம்மிடம் அல்லது நமது துணையிடம் உள்ள பிரச்சனையை வெளியே சொல்ல தயங்கி., தனது பிரச்சனையை வெளியே சொல்லும் பட்சத்தில் இவ்வுலகம் எவ்வாறு நம்ம பார்க்கும் என்ற அச்ச நிலையிலேயே பல பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது. இதனால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

இதுமட்டும்மல்லாது இந்த பிரச்சனையின் காரணமாக ஒரு தம்பதி தனது துணையை சரியான முறையில் அவருக்கு திருப்தி ஏற்படுத்தாத பட்சத்தில்., மற்றொரு துணையை யாரோ ஒருவர் தேடிவிடுவாரோ என்ற அச்சமும் இருவருக்குள் ஏற்படும் சந்தேக தீயாய் விளைந்து பெரிதாகி இதனால் பல பிரச்சனையும் துயரமும் ஏற்படும். 

இது ஒரு புறம் இருக்க., ஆண் தனக்குள் இருக்கும் பிரச்சனையை மனைவியிடம் கூறாமல்., தனது பிரச்சனையை கூறினால் மனைவி கூட நம்மை மதிக்கமாட்டாள் என்ற எண்ணத்தில் மறுப்பதும் உண்டு., தன் மீது உள்ள மதிப்பு., மரியாதை மற்றும் பயத்தின் காரணமாக ஏற்படும் தாழ்வு மனப்பான்மையானது பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which types of problem about husband and wife in love and play enjoy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->