பாம்பு கடித்த சிறுமியை மருத்துவமனை ஊழியர்கள் பங்கம் செய்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பல இடங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டம் கொண்டு மாற்றி வரும் நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை குற்றங்கள் ஓய்ந்த பாடில்லை. 

உத்தர பிரதேச மாநிலத்தின் பரேலி நகரில் உள்ள பண்ணையில்  ஒரு சிறுமி வேலை பார்த்து வந்தாள். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த சிறுமியை பாம்பு ஒன்று கடித்து விட்டது. 

உடனே அந்த சிறுமியை, நகருக்கு அருகே உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 5 நாட்களுக்கு முன் ஐ.சி.யூ. பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், சிறுமியை கவனிக்க சிறுமியின் பாட்டி உடன் இருந்தார். 

பின்னர், சிறுமி ஐ.சி.யூ. பிரிவில் தனியாக இருந்த நிலையில், மருத்துவமனை சீருடை அணிந்தபடி ஊழியர் ஒருவர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் உள்ளே வந்தனர். அந்த ஊழியர் சிறுமிக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட முயன்றுள்ளான். எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை கூட்டாளிகள் வாயை பொத்தி, கட்டி போட்டுள்ளனர்.

அதன்பின் அந்த கும்பல் சிறுமியை கற்பழித்து விட்டு, மருத்துவமனையிலிருந்து தப்பியோடி சென்று விட்டனர். அந்த சிறுமியை பொது வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னர், தனது பாட்டியிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பாட்டி மருத்துவர்களிடம் நடந்ததை கூறியதையடுத்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே விசாரணை நடத்தி வந்தனர். இதில் மருத்துவமனை ஊழியரை கைது செய்த போலீசார், அவன் கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். 

English Summary

The horrific victim of the snake bite girl hospital staff!

செய்திகள்Seithipunal