கள்ள காதலிக்காக நகைக்கடையை சுருட்டிய சூப்பர் ஹீரோ! அதிர்ச்சியில் உறைந்த போலீசார்! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த கணேசன் என்பவர் அப்புகுதியை சேர்ந்த மாரிமுத்தாள் என்பவரிடம் தொடர்பு வைத்து வந்துள்ளான். மாரிமுத்தாள் தனக்கு தங்க நகைகள் வேண்டும் என அடிக்கடி கேட்டுள்ளார். இதனால் இரவில் வீடுகளில் சிறுசிறு கைவரிசை செய்தும் வந்துள்ளான்.

இதற்கிடையில் இன்னும் நகை வேண்டும் என வலியுறுத்தி கேட்டதால்,  கடந்த மாதம் 25 ம் தேதி, நெல்லை பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள மதுரா நகை கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்த அதிகமான நகைகளையும், ரூ.150000 ரொக்க பணத்தையும் எடுத்து கொண்டு, தனது பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்றுள்ளான்.

காலையில் நகைக்கடை திருட்டு குறித்து புகார் அளிக்கையில், சிசிடிவி-யில் பதிவான காட்சியில் திருடனின் முகம் சரியாக தெரியதால் பைக் நம்பரை வைத்து தேடியுள்ளனர். பின்னர் அவன் இருக்கும்  இடம் அறிந்து கைது செய்தபின், உடந்தையாக இருந்த மாரிமுத்தாளையும் கைது செய்தனர். 

பின்னர் நகை குறித்து விசாரணை செய்த போது, திருட்டு நகைகளை அடகு வைத்து பணம் பெற்றதாகவும், கொஞ்சம் நகையை வங்கியில் அடகு வைத்ததாகவும் கூறியுள்ளான். அடகு கடையில் வைத்த நகையை மீட்ட போலீசார், வங்கியில் உள்ள நகையை மீட்க முடியாமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.திருட்டு நகையை வங்கியில் அடகு வைக்காமலிருக்க புதிய விதிகளை கொண்டுவர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தனது கள்ளகாதலிக்காக தனி ஒரு நகை கடையை கொள்ளையடித்த சம்பவம் போலீசாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

English Summary

The hero who broke jewelry for a romantic love! Frozen Frozen Police!

செய்திகள்Seithipunal